அமெரிக்காவின் ‘அங்காடி தெரு’

‘அமெரிக்கா ஒரு சொர்கபுரி’ என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டின் ஆட்சியாளர்களைப்போலே அவர்களின்  திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்துவந்திருக்கின்றன. தேசபக்தித்திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்கமுடியும்? அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவபோக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை. டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும் […]

நாக் அவுட் முதல்… (தொடர்)

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த நூறு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வந்து நம் மனங்களை தனது வணிகச்சந்தைக்கு ஏற்ப தகவமைத்துவிட்டன. அதிலிருந்து தப்பிக்க முடியாமல் தியேட்டர்களில் நமது உழைப்பை டிக்கட்டுகளாக மாற்றி யாரோ  சிலரின் கல்லாப்பெட்டிகளை நிரம்பிவழியச்செய்து கொண்டிருக்கிறோம். இது வெறுமனே பணம் தொடர்பானதென்றால் விட்டது சனியன் என இருந்துவிடலாம்தான். ஆனால் இது அப்படியில்லையே. என்னென்னமோ செய்கிறது. நம் வாழ்வை தீர்மானிக்கிறது. நமது அரசியலை வழி நடத்துகிறது. நமக்கு யார் தலைவனாக வேண்டுமென முன்மொழிகிறது. நம் […]