‘மாற்று’ தலைப்பிரசவம்: அரசியல் பேசும் அயல் சினிமா …

அரசியலற்ற ஃபேன்டசி திரைப்படங்களையும் ஆதிக்க அரசியலை மறைமுகமாகச் சொல்கிற அதிரடி ஆக்சன் படங்களும்தான் நமக்கு உலகத் திரைப்படங்களாக திணிக்கப்படுகின்றன.

பிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை!

நதீன் லபாகி என்கிற லெபனான் பெண் இயக்குனரின் இயக்கத்தில், ஆஸ்கார் மற்றும் கேன்ஸ் திரைப்ப விருதுக் கதவுகளைத் தட்டிவிட்டு வந்த திரைப்படம் தான் “Where do we go now?”. மத ஒற்றுமையை வலியுறுத்திய இத்திரைப்படம்தான், லெபனான் நாட்டு வரலாற்றிலேயே மிக அதிகமாக வசூல் செய்த மாபெரும் வெற்றிப்படம். 50 ஆண்டுகளாக மதம் சார்ந்த போர்ச்சூழலிலேயே வாழ்ந்துவருகிற லெபனான் மக்கள் அனைவரும் மதக்கலவரங்களை வெறுத்து ஒற்றுமையினையே விரும்புகிறார்கள் என்பது இத்திரைப்படத்தின் வெற்றியின்மூலம் உறுதியாகியிருக்கிறது. திரைக்கதை: லெபனான் உள்ளிட்ட […]

Ray – The ruler of silent realms

In Ray’s movies, actions are where the silences are. It is cinema at its purest. Every art form, has its own realm where it reaches its zenith. The thrill of the theatre is in its vibrant expression. What is opera without the crescendo? For a painting, there is the prime feeling which the subordinates strive to invigorate.

அறிவுள்ள மூடர்கள் …!

ஏன் இந்த வீண்வேலை? தமிழ் சினிமா இவர்களுக்கெல்லாம் என்ன செய்தது?. சாதாரணமாக, நான்கு பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகள், கவர்ச்சிக்கு மட்டும் நாயகி என்று வைத்து படம் எடுத்து காசு பார்த்துவிட்டு போகலாம்தானே? ஆனால், 21 ஆம் நூற்றாண்டின் இளம் கீற்றுக்கள் அப்படி எளிதான பாதையை விரும்பவில்லை. தன்னையே உருக்கி ஊற்றி, தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு முயற்சிதான் ‘மூடர் கூடம்’. இந்தப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். கதை சொல்லும் உத்தி, திரைக்கதை நேர்த்தி, […]

தமிழ்த் திரைப்படங்கள் உறவும் ஊடாட்டமும்

1970 களிலிருந்து தமிழ்த் திரைப்படத்தை பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன். ஞானஒளி நான் பார்த்த முதல் திரைப்படம். சிவாஜிகணேசன், சாரதா, மேஜர் சுந்தர்ராஜன் நடித்தப் படம். பி.மாதவன் இயக்கிய படம். நான் கேட்ட முதல் திரைப்பாடலும் இந்த படத்தில் இடம் பெற்று டி.எம்.எஸ் பாடிய `தேவனே என்னைப் பாருங்கள் என்பதுதான். நான் சமீபத்தில் பார்த்தப் படம் துரை. செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல். ஞானஒளிக்கும் எதிர் நீச்சலிற்கும் இடையில் நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த […]

தங்க மீன்கள் – சினிமா மொழியை தவறவிட்ட இயக்குனர் ராம் !

(தங்க மீன்கள் திரைப்படத்தை வாழ்த்தி வரவேற்கும் குரல்கள் கேட்கின்றன. ஆனால், இயக்குனர் ராம் – மேம்பட, அவரின் படைப்புகள் மேம்பட வாழ்த்துகள் மட்டும் போதாதே. தங்க மீன்கள் திரைக்கதையிலும், கதையிலும் உள்ள குறைபாடுகளை இந்த விமர்சனம் முன் வைக்கிறது. அதுவும் இயக்குனர் ராம் என்பதால் உருவான எதிர்பார்ப்பிலிருந்து இந்த விமர்சனம் அவரின் அடுத்த இயக்கமான ‘தரமணி’யை மேம்படுத்த உதவுமென, நம்புவோம்)   Image Courtesy : Wikimedia தங்க மீன்கள் – இது நான் வியந்த ராமின் […]

அமெரிக்காவின் ‘அங்காடி தெரு’

‘அமெரிக்கா ஒரு சொர்கபுரி’ என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டின் ஆட்சியாளர்களைப்போலே அவர்களின்  திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்துவந்திருக்கின்றன. தேசபக்தித்திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்கமுடியும்? அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவபோக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை. டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும் […]

நாக் அவுட் முதல்… (தொடர்)

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த நூறு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வந்து நம் மனங்களை தனது வணிகச்சந்தைக்கு ஏற்ப தகவமைத்துவிட்டன. அதிலிருந்து தப்பிக்க முடியாமல் தியேட்டர்களில் நமது உழைப்பை டிக்கட்டுகளாக மாற்றி யாரோ  சிலரின் கல்லாப்பெட்டிகளை நிரம்பிவழியச்செய்து கொண்டிருக்கிறோம். இது வெறுமனே பணம் தொடர்பானதென்றால் விட்டது சனியன் என இருந்துவிடலாம்தான். ஆனால் இது அப்படியில்லையே. என்னென்னமோ செய்கிறது. நம் வாழ்வை தீர்மானிக்கிறது. நமது அரசியலை வழி நடத்துகிறது. நமக்கு யார் தலைவனாக வேண்டுமென முன்மொழிகிறது. நம் […]