அமெரிக்க அரசியலும், ஆலிவுட் அல்லக்கைகளும்…

ஒரு முக்கியமான பிரச்சனை மக்களின் பார்வைக்கு வருகிறபோதெல்லாம், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேறு ஏதாவது பிரச்சனையைக் கெளப்புவது அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு கைவந்தகலை. அப்படியான திசைதிருப்பலை செய்வதற்கென்றே சிறப்பு நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு “SpinDoctors” என்று பெயர். ஒவ்வொரு முறையும் அமெரிக்காவில் தேர்தல் வருகிறபோதும், “தீவிர்வாதம்” என்கிற வார்த்தை எதற்காக ஊடகங்களில் அதிகமுறை பயன்படுத்தப்படுகிறது? 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த மோனிகா லீவின்ஸ்கி என்கிற பெண்ணுடன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தகாதமுறையில் உறவுகொண்டார் […]

சமுத்திரக்கனியின் “அப்பா” விமர்சனம் | Appa – Movie Review

#அப்பா தமிழ் சினிமா வெளியில் மிகவும் மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உரிய திரைப்படங்களில் ஒன்றாகி இருக்கிறது. சமுத்திரக்கனி என்கிற தனிமனிதன்… அவனது படைப்பின் வழியாக மிகப்பெரியதொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறான். மிகவும் அதிமுக்கியமான அவசியமான ஒரு மாற்றத்தை உங்களிடத்தில் எதிர்பார்த்து நிற்கிறான். தினசரி… காலையில் எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு படு சிரத்தையாக அனுப்புகிற அம்மா, அப்பாவா நீங்கள்? ஆம் என்றால்… இது நீங்கள் பார்க்க வேண்டிய படம். உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு அடுத்தபடியாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப […]

இறைவி : ஆணாதிக்க சிந்தனையோடு பெண்ணியம் பேசும் படம்

நீண்ட நாளைய என் சட்ட முதுகலை ஆய்வுப் பணியினால் உண்டான அதீத stress , மற்றும் வேலை பளுவின் காரணமாக ஒரு மாறுதல் மற்றும் Relaxation காகவும் படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன், அதுவும் என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் தொ(ல்)லை பேசியின் வாயிலாகவும்,நேரிலும் இறைவி திரைப்படத்தை பார்த்துவிட்டாயா..? அப்படம் மீதான உமது கருத்து என்ன..? என்றெல்லாம் இந்நாட்டின் தேசியத்திற்க்கு ஏதோ பங்கம் வந்துவிட்டது போல் கேள்வி கேட்டு துளைத்ததால் சரி இறைவி என்ற திரைப்படத்தை […]

இறைவி – ” எழுப்பும் கேள்விகளும் கொடுக்கும் பதில்களும்”

கதாநாயகிகளுக்கு கோவில் கட்டி “இறைவி”களாக மாற்றி வழிபட்ட நம் தமிழ் சமூகத்தில் வெகு சில இயக்குனர்கள் / எழுத்தாளர்களால் மட்டுமே நல்ல கதாப்பாத்திரங்களை கட்ட முடிந்துள்ளது. தமிழ் படங்களில் வரும் கதாநாயகிகளை அறிவுள்ளவர்களாக காட்டியுள்ள படங்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் பார்த்து முடித்து விடலாம் (அதிலும்கூட பல படங்கள் அறிவுள்ள பெண்களுக்கு புத்திமதி சொல்லி அறிவற்றவர்களாக அடங்கி நடக்கச் சொல்வது வேறு கதை). 90 சதவிகிதம் படங்கள் ஆணின் வீரதீர செயல்களும் அவற்றின் துதிபாடல்களும் அவர்களது “பழிக்குப் […]

‘சாய்ராத்’ – ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஆவணம்…

சோகமான கதையோ, காட்சிகளோ, திரைக்கதையோ கொண்ட எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். அவை தரும் சோகத்திலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் மீள்வதற்கு கொஞ்ச நேரம் ஆகலாம். ஆனால் ஒரு சில திரைப்படங்களின் சோகக் காட்சிகள் மட்டுமே அந்தக் காட்சியையும் தாண்டி பலநாட்கள் நம்மை சோகத்திற்குள்ளாக்கும். அக்காட்சிகளைப் போன்ற கொடுமைகள் நமக்கு அருகிலேயே சிலருக்கு நடந்துகொண்டிருக்கிறது என்கிற அதிர்ச்சிதான் அதற்கு மிகமுக்கியமான காரணமாக இருக்கும். சமீபத்தில் அப்படியாக அதிகமாக பாதித்த திரைப்படங்கள் – தமிழில் விசாரணை, மராத்தியில் ஃபான்றி. “உனக்கு அருகிலேயே […]

இறைவி – இரு பார்வை

இறைவியின் கருத்து திணிப்புகளை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், ஆண்களின் நிதானமின்மை – பாதிக்கப்படும் பெண்கள் என ஒரு பக்கா வட்டியும் முதலும் எப்பிசோட். அதில் பெண்ணியம் தூவி இறக்கியிருக்கிறார் கார்த்திக்.

உறியடி – ஒரு இயக்குநரின் பார்வையில் . . . . . . . .

புலம்பும் தமிழ் தலைமுறையின், அக்கினி குஞ்சுகள் செய்யும் சீர்திருத்த அழித்தொழிப்பே “உறியடி”.. 1999-ல் நடக்கும் தேர்தலை குறிவைக்கின்றது ஜாதி சங்கத்தில் அங்கம் வகிக்கும் குடும்ப பொறுப்பாளர்கள். அதன் ஆரம்பகட்டமாக எளிதில் பதிக்கப்படும் சிலையை திட்டமிட்டே நிறுவ, அரசோ அதற்கு அனுமதி மறுக்கின்றது. தங்களின் சிலையை திறக்க அரசியல் தேவைப்படுகின்றது. இந்த வேளையில் ஜாதி சங்க பொறுப்பாளருக்கும் நான்கு கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு தொடர்பு, மது மற்றும் உணவு கடை(Dhaba) வழியாக ஏற்படுகின்றது. மதிநிலை மறந்து ஆதிக்க அடையாளத்தின் […]

குறியீடு – குறும்படம் / அலசல் கட்டுரை

27 நிமிடங்கள் மனிதன் பேசும் மொழிகளில் எந்த மொழியில்  இருந்தும் ஒரு வார்த்தை கூட பயன்படுத்தாமல் ஒரு குறும்படம். உங்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது, உங்களிடம் பேசினால் என்ன நடந்துவிடப்போகிறது… என்று யாரையோ சவுக்கால் அடிப்பதற்காகவே படம் முழுவதும் மொழியை, வார்த்தைகளை இயக்குநர் தவிர்த்திருப்பார் போல. படத்தின் பெயர் குறியீடு. படம் முழுவதும் குறியீடுகள் தான். அந்தக் குறியீடுகளை பார்வையாளர்களின் வசதிக்கு விட்டு விட்டு, உங்கள் பாடு நான் அது தான், இது தான் என்று எதையும் […]

கோர்ட் (2015) மராத்தி: இந்திய நீதித்துறையின் அவலக் குரல் …

அரசாங்க ஊழியர்கள் ‘as per papers’ என்று சொல்லி எவ்வளவு மடத்தனமாக நடந்துகொள்வார்கள், மக்களின் அவசரத்துக்கு தகுந்த மாதிரி இல்லாமல் எவ்வளவு மெதுவாக ஒவ்வொரு காரியமும் நடக்கும், அரசாங்கம் நினைத்தால் ஒரு சாதாரண மனிதனைக்கூட குற்றவாளி ஆக்கமுடியும் என்பதை நிதர்சனமாக எடுத்து வைத்து வாதாடி இருக்கிறார் இயக்குனர்.

காக்கா முட்டை

மழையில் ஸ்லோ மோஷனில்.. வில்லனை ஓட ஓட வெட்டும் காட்சிகள் இல்லாத.. சண்டைக்காட்சிகளில், ஹீரோவின் கால் தரையிலேயே பதியாமல் வானிலேயே சுற்றி 100 பேரை அடித்து வீழ்த்துகிற சோதனைகள் இல்லாத.. நான் யார் தெரியுமா ? என் பேரு ஏன் மாஸ் தெரியுமா? என் பேரு ஏன் சுறா தெரியுமா? போன்ற வசனங்கள் இல்லாத.. திரைக்கதை டொக்கடிக்கும் போதெல்லாம், மெழுகுச் சிலைப் போன்ற பெண்ணுடன் டூயட் என்ற பெயரில் ஹீரோ பண்ணும் அழிச்சாட்டியங்கள் இல்லாத.. எப்பபாரு வீர வசனம் […]