சகாவு – திரை விமர்சனம்.

  மலையாள திரையுலகம் நட்சத்திரங்களால் ஆனதல்ல, நல்ல கதைகளாலும், கலைஞர்களாலும் ஆனது. மற்ற மாநிலங்களில் வெற்றி பெரும் பாடல், சண்டை, நகைச்சுவைக் கலவை இங்கு ஏனோ அதிகம் எடுபடுவதில்லை. ஆனாலும் வருடம் முழுவதும் தரமான படங்களை அசாதாரணமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் சேட்டன்மார்கள். கம்மட்டிப்பாடம், பத்தேமாரி, அனுராக கரிக்கான் வெள்ளம், கிஸ்மத், அங்கமலி டைரீஸ் இவையெல்லாம் கடந்த ஒரு வருடத்தில் வெளியாகி, விமர்சகர்களையும், ரசிகர்களையும் ஒரு சேர கவர்ந்த திரைப்படங்கள். இந்த படங்கள் அனைத்திலும் பொதுவான ஒரு அம்சம், […]

தர்ம் சங்கட் மெய்ன் – திரை விமர்சனம் . . . . . .

தோழர் ஞாட்பன் சிவாவின் பரிந்துரையின் பேரில் சமீபத்தில் ஒரு சிறப்பான திரைப்படம் பார்த்தேன். ஃபவாத் கானின் இயக்கத்தில் 2015-ல் வெளிவந்த ’தர்ம் சங்கட் மே’ என்கிற ஒரு ஹிந்தி திரைப்படம். காது ஜவ்வுகளைக் கிழிக்கும்படியான கதாநாயகனின் இரைச்சல் சத்தங்களோ, லாஜிக்கே இல்லாத பஞ்ச் வசனங்களோ, சண்டைகளோ இல்லாமல் ஒரு சினிமா எப்படி இயல்பானதாக, நமக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது இந்தப் படம். ஒரு குழந்தையின் பெற்றோரின் மதமே வலுக்கட்டாயமாக அந்தக் குழந்தையின் மீது திணிக்கப்படுகிறது. […]

களவு – குறும்படம் ஒரு பார்வை . . . . . !

இந்த குறும்படத்தின் கதைக் கரு என்பது சில வருடங்களுக்கு முன நம்மில் பலரும் பெரும்பான்மையாக நகைச்சுவையாகவோ அல்லது கழிவிரக்கமாகவோ கடந்து போன ஒரு புகைப்படம்தான், ஒரு இஸ்லாமிய பள்ளியில் மாநில/மாவட்ட அளவில் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த ஒரு ப்ளெக்ஸ் பேனரின் புகைப்படம்தான் அது. அதில் ஆண் பால் மாணவர்களின் முகம் மட்டுமே நமக்கு தெரியும் மற்ற பெண் மாணவர்களின் முகம் மொத்தமாக ஹிஜாப் (முகத்திரை) போட்டு மூடப்பட்டு அனைவரையும் பொதுவாக காட்டும். (ஒருவரின் படத்தயே […]

தங்கல் — பார்ப்பவர்கள் மனதில் செய்யும் மனயுத்தம் !

இந்தி திரையுலகில்  (பாலிவுட் என்ற சொல்லை அறிந்தே தவிர்க்கிறோம்) தலையில் அடித்துக்கொள்ளும்படியான படங்களுக்கு குறைவில்லை ஆனாலும் அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் , நல்ல கலைஞர்களின் படைப்புகள் என வந்து சற்றே ஆறுதல்படுத்தும். அவ்வாறான ஒரு நல்ல திரைப்படம்தான் தங்கல் . தங்கல் என்றால் யுத்தம் எனப்பொருள். சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிங்க் திரைப்படம் எப்படி பெண் குறித்த பல கற்பிதங்களை நேருக்கு நேர் நின்று கேள்வி எழுப்பி, கட்டுடைத்ததோ, அதே வரிசையில் சேர்ந்திருக்கிறது தங்கல். […]

ஏன் என்னை பாதித்தான் “மாவீரன் கிட்டு”?

விபரம் அறியாமல் கலவரம் செய்பவதாக குற்றம் சாட்டுபவர்களுக்கு கொஞ்சமேனும் நிஜங்கள் புரிய இம்மாதிரியான திரைப்படங்கள் ஆவணம் செய்யட்டும். சாதிக் கலவரக் கொலைகள் என கடந்து செல்லும் முன் சிந்தியுங்கள். கேடுகெட்ட சாதீய சமூகத்திற்குள் எதிர் கேள்வி எழுப்பிய ஒருவனின் குரல்வளை சகல ஆதரவோடு குற்ற உணர்ச்சியின்றி நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்பதை உணருங்கள்.

மாவீரன் கிட்டு…

எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க… நாங்க எரியும் போது…. எவன் மசுர புடுங்கப் போனிங்க..? என்ற இன்குலாப் அய்யாவின் வரிகளை ஒரு கணமேனும் சிந்திக்கத் தூண்டினால்… அது ‘மாவீரன் கிட்டுவின் ’ மாபெரும் வெற்றியே.

“ஜாதிகளிடம் ஜாக்கிரதை” & “டாக்டர்.ஷூமேக்கர்”… “நீலம்” நிகழ்த்திய நெகிழ்ச்சியும், ஏற்றிய நெருப்பும்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையிடப்பட்டது. இரண்டு ஆவணப்படங்கள். நீலம் அமைப்பின் சார்பில் இந்த ஆவணப்பட வெளியீடு நிகழ்வை முத்தமிழ் ஒருங்கிணைத்திருந்தார். வணிகப்படங்களின் தேவையையும் ஆவணப் படங்களின் தேவையையும் ஒப்பீடு செய்ய முடியாது என்றாலும், ஆவணப்படங்கள் வணிகப் படங்களுக்கு நிகராக தேவை என்பதையே திரையிட்ட “ஜாதிகளிடம் ஜாக்கிரதை” மற்றும் “டாக்டர். ஷூமேக்கர்”… ஆகிய இரண்டு ஆவணப் படங்களும் முன்மொழிந்தன. ஓவியர் சந்துரு, இயக்குநர்கள், ராம், சுசீந்திரன், பாண்டிராஜ், மற்றும் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ்.வி.ராஜதுரை, வெங்கடேஷ் […]

பெண்மை எனும் கற்பிதங்களை உடைக்கும் “பிங்க்” . . . . . . . !

“குணக்கேடு” எது குணக்கேடு ? மது அருந்துவதால் , புகை ப்பிடிப்பதால்  ஒருவர் குணக்கேடு உள்ளவராக கூற முடியுமா? விருப்பப்பட்டு ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு உறவு கொள்வதால் ஒருவர் குணக்கேடு உள்ளவராக ஆகி விடுவாரா? மேற்கேட்ட கேள்விகளுக்கு அவ்வாறெல்லாம் இல்லை . இதுவெல்லாம் குணத்தை தீர்மானிக்கும் காரணிகள் இல்லை என நீங்கள் கூறினால் , சபாஷ்!! மிக விசாலமான இதயம் படைத்தவர் நீங்கள் , முற்ப்போக்கானவர்  பகுத்தறிவுவாதி . நிற்க , மேலே ஒவ்வொரு முறையும் “ஒருவர்” […]

குற்றமே தண்டனை – விமர்சனம்

சாமான்ய ரசிக மனதில் இப்படம் எவ்வகையான தாக்கத்தை நிகழ்தப் போகிறது எனத் தெரியவில்லை. ஆனால், நல்ல சினிமா ரசிகர்கள் நிச்சயம் ஆதரித்து கொண்டாட வேண்டிய படம். சில முரண்கள் உண்டுதான் படத்தில். ஆனால், முதலில் நிஜ சினிமாவை நோக்கிய இந்த அடுத்தக் கட்ட உடைப்பு கொண்டாடப்பட வேண்டியது.

ஜோக்கர் – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் . . . . . . !

ஜோக்கர் இயக்குநர் ராஜீமுருகன், மக்களை  பேசவில்லை. மக்களை நோக்கி பேசி இருக்கிறார். படத்தின் வசனங்கள் அத்தனையும், கை தட்டலாக அறுவடையாகிறது. படம் துவங்குகிறது, அதிகாலை சாலையோரம் சிறுவர்கள் காலைகடனுக்காக அமர்திருக்கின்றனர். துடைப்பம் … துடைப்பம் என்று சைக்கிளில் துடைப்போம் விற்பவர்கள் வருகின்றனர். அதில் இருந்தே சமூக அவலங்களை துவைக்க ஆரம்பிக்கிறார் இயக்குனர். ஜனாதிபதி  மணல் லாரியால் கால் ஒடைந்த போன உசைன் போல்ட்டுக்காக  கலெக்டரிடம் நீதி கேட்கிறார்.!!! அவருடன் இணைகின்றனர் இசையும், பொன்னூஞ்சலும். இருவரும் சட்டக்கல்லூரி மாணவியான […]