தீரன் அதிகாரம் ஒன்று – ஒரு விமர்சனப் பார்வை . . . . . . . . !

தீரன் திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. வடிவ ரீதியாகவும் -அரசியல் ரீதியாகவும் தீரன்..  எனது பார்வையில். வடிவம் கொடூர கொள்ளையர்களை பிடிக்கும் போலீஸ் படை என்கிற இந்த உண்மைச் சம்பவ ஒன் – லைனருக்கு சுவாரஸ்யமாக சம்பவங்கள்  அமைத்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். கொள்ளை கூட்டட்தை மோப்பம் பிடிப்பது – கொள்ளை கூட்டத்தை தேடிப் பிடிப்பது என படத்தில் 2 பவர் ப்ளேக்கள் .இந்த 2 பவர் ப்ளேக்களில் தலா 2 சீக்வென்ஸ்கள் […]

“அறம்” பேசும் அரசியல் . . . . . . .

சினிமா கலைகளின் உச்ச வடிவம். அதன் மொழி, சாகசங்களை நிகழ்த்தவல்லது. ஒளிநிழல் ஊடகமான சினிமா, இருட்டின் மீது பேரொளியைப் பாய்ச்சவல்லது. எந்தக் கலை வடிவமும் மக்களுக்கானது. மக்களின் குரலை, புறநிலை எதார்த்தத்தை, அழகியலோடு காட்சிப்படுத்தும் இந்த சினிமா மக்களுக்கான மீடியம். புராணக்கதைகள் தொடங்கி, சரித்திரம், சாகசம், அடையாளம், பிரச்சாரம், அரசியல் என தமிழ்சினிமாவை  வகைப்படுத்தலாம். “அறம்” அந்த வகையில் அரசியல் சினிமா படைப்பு முன்வைக்கும் அரசியலைவிட, படைப்பாளியின் அரசியலோ, படைப்புக்குப் பின்னுள்ள அரசியலோ பேசுபொருள் இல்லை. படைப்பின் […]

லக்ஷ்மி குறும்படம் – இருவேறு கோணத்தில் ஓர் பார்வை . . . . . . .

முதல் கோணம்: கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; பாரதியின்  வரிகள் கற்பு எனப்படுவதை இருபாலருக்கும் சமமென்கிறது. இந்த குறும்படம் ‘லட்சுமி’ நிச்சயமாக கற்பை பற்றிய விவாதங்களுக்காக எடுக்கப்பட்டதல்ல. ஒரு மத்திய தர அல்லது நடுத்தர குடும்பங்களின் இயந்திர ஒட்டத்தில் உணர்வு பகிர்வுகளுக்கான நேரம், உணர்வை வெளிப்படுத்துவதற்க்கான வெளி ஏற்படுவதில்லை. இயந்திரத் தனமான வாழ்க்கை நகர்வில் உடலுறவை தவிர்த்து ஒருவருக்கொருவர் செலவிடும் நேரம் என்பது மிக குறைவு .உடலுறவின் உண்மை தன்மையை, […]

அறம் காண விரும்பு . . .

திருவள்ளுவர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த நான்கு வயது குழந்தையும் , புல்லேந்திரனின் மகளுமான தனிஷக்காவின் வாழ்வில் நேர்கோட்டில் வந்துபோனது என்பதையும் அன்றாட வாழ்வியலில் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் (BPL ) வர்கத்தினர் அனுபவித்து வருகிறார்கள் என்பதே “அறம்” திரைப்படம் வழியாக இயக்குனர் கோபி நயினார் உருவாக்கிய திரைக்கதை

மகளிர் மட்டும் – ஆண்களின் மனசாட்சியை உறுத்தும் படம் . . . . . !

பெண்களுக்கான படம் என்பதை அறித்து கொளத்தூர் பகுதியிலிருந்து 60-க்கும் மேற்பட்ட மாதர்சங்க பெண் தோழர்களுடன்  சேர்ந்து இப்படத்தை பார்த்தேன். என் வாழ்நாளில் படத்திற்காக இவ்வளவு பெண்கள் ஒன்றுகூடி பார்த்த முதல் படம் இதுதான். காலம் காலமாக நம் சமூகத்தில் எந்த சூழலும் பெண்களுக்கு தொடர்ந்து கொடுமைகள் நடந்துக் கொண்டுதான் வருகிறது. இதில் குடும்பங்களில் நடக்கும் கொடுமைகளை ஆணுக்கு உணர்த்த எடுக்கப்பட்ட படமாக மகளிர் மட்டும் உள்ளது. அனைவரும் சமம் என்று அரசியல் சாசனம் சொல்லி இருந்தாலும் இந்த […]

மகளிர் மட்டும் – சாமானியர் பார்வையில் …

குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மகளிர் மட்டும். திரையில் பெண்ணியம் பேசும் படம். பிரபாவதியாக வரும் ஜோதிகா ஒரு ஆவணப்பட இயக்குநர். வீட்டில் இருக்கும் பெண்கள் சும்மாவா இருக்கிறார்கள்? என்ற கேள்வியுடன் ஆவணப்படம் எடுக்கும்போது தனது வருங்கால மாமியாரான ஊர்வசியின் நிலைமை பற்றியும் ஜோதிகாவுக்கு நினைவு வருகிறது. கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறார். ஊர்வசி பள்ளிப் பருவத்தில் அவரது தோழிகளான சரண்யா மற்றும் பானுப்ரியாவைப் பிரிந்ததைச் சொல்ல, அந்த மூவரையும் இணைத்து வைக்கவும் […]

துப்பறிவாளன் – விமர்சனம் . . . . . . . !

­மச்சான் மிஷ்கின் ஷாட்டு மாதிரி இருக்குடா என்று குறும்பட இளசுகள் சிலாகிக்கும் அளவு தழிழில் தனக்கென பிரத்யேக திரைமொழியை உருவாக்கி காட்டியவர் மிஷ்கின். கேமராவில் பதிவு செய்வதல்ல சினிமா , கேமரா பேசுவதே சினிமா என்பதை வெகுஜன பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தவர். துப்பறிவாளனில் கேமரா பேசியிருக்கிறதா ? அபாரமாக பேசியிருக்கிறது. காட்சிகளை ஆழ்ந்த  அனுபங்களாக்குவதில் பிற மிஷ்கின் படங்களைப் போலவே துப்பறிவாளனும் ஜெயித்திருக்கிறது. ஆனால் , ஷெர்லாக் ஹோம்ஸ் பிரியர்களுக்கு சோளப்பொரியை மட்டுமே விருந்தாக படைத்திருக்கிறது துப்பறிவாளன். […]

DUNKIRK REVIEW | டன்கிர்க் விமர்சனம்

என் வாழ்நாளில் நான் பார்த்த படங்களில் என்னால் மறக்கவே முடியாத படங்களில் ஒன்று இன்டர்ஸ்டெல்லர் Interstellar. இன்டர்ஸ்டெல்லர் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன் படமும் உலக அளவில் சினிமா ரசிகர்களாலும், சினிமாத்துறையினராலும் வியந்த பார்க்கப்படும், பாராட்டப்படும் படங்களில் ஒன்று. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய படம், டன்கிர்க் (Dunkirk). டன்கிர்க் என்பது பிரான்ஸில் உள்ள ஒரு துறைமுகத்தின் பெயர். பெல்ஜிய நாட்டு எல்லைக்கு மிக அருகில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த டன்கிர்க் […]

விக்ரம் வேதா – ஒரு விமர்சனப் பார்வை . . . . . . . . !

விக்கிரமாதித்தன்  வேதாளம் கதை பாணில வந்திருக்கும் கள்ளன் போலீஸ் சினிமா விக்ரம் வேதா. என்கவுண்ட்டர் தீவிரவாதியான மாதவன் எனும் போலீஸூக்கும் ஏரியா ரவுடியான விஜய் சேதுபதிக்குமிடையேயான ஆட்டத்தில் விஜய் சேதுபதி தன்னை பிடிக்கும் ஒவ்வொரு முறையும் மாதவனுக்கு ஒரு கதையை கொடுத்து அதன் விடையை தேடத் தூண்டுகிறார். எதிர்பாரா விடைகளும் அதன் தர்மங்களும்தான் விக்ரம் வேதா. ஒரு அட்டகாசமான என்கவுண்ட்டரோடு ஆக்ரோசமான ஸ்டைலிஷாக அறிமுகமாகும் மாதவன். போலீஸ் நாய்க்கு வடையை  விட்டெறிந்த குறியீட்டோடு அமைதியாக சரணாகும் விஜய் […]