நிர்பயா தினமும் நில்லாத பயமும் – சுசீந்திரா

உலக அளவில் நாள்தோறும் 35 சதமான பெண்கள் அதாவது சராசரியாக 3 க்கு 1 பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனக் கூறுகிறது சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. அதிலும் 30 சதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதையும் நிரூபித்துள்ளது. இவர்களில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களில் 38 சதம் பெண்கள் தங்களுக்கு தெரிந்த நபர்களாலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனவும் கூறுகிறது அவ்வறிக்கை. “உணர்வுள்ள அனைவருக்கும் உயிர்த்தல் பொதுவானதே” என்கிற போது ஒரு பாலினத்தின் மீது மட்டும் இத்தனை வன்முறையென்பது எந்த நியாயத்தை கூற முடியும்?

நீங்கள் கலகக்காரர்கள்… எப்போதும் கலகம் செய்யுங்கள் – பிடல் காஸ்ட்ரோ

கலகக்காரர் என்றாலே இலக்கு இல்லாதவர்கள் என்று பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் கலகம் செய்வதற்கு பல காரணங்கள் வேண்டும். நான் கலகக்காரனாக வளர்ந்ததற்கு பல காரணங்கள்-பல லட்சியங்கள் இருந்தன. இன்று வரையிலும் நான் கலகக்காரனாகவே இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். ஏனென்றால், நான் கலகக்காரனாகவே தொடருவதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. போராட்டங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் நேசிக்கும் இந்த நாட்டை, இந்த உலகை மேலும் மேலும் சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்காக கற்றுக் கொண்டே இருக்கிறேன். உலகமயம் ஆக்கப்பட்டுவிட்ட இந்த புவிக் கோளம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கி கால வெளியில் பயணப்படுகிறது என்பதை கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்.

மக்களிடமிருந்து…. மன்னர்களுக்கு….. செ. முத்துக்குமாரசாமி

பிரதமரின் இந்த அறிவிப்புகளும், அதை தொடர்ந்த நடவடிக்கைகளும் நம்முன் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதற்கான பதில்களை பிரதமரிடம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர் நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்வதில்லை.

கறுப்பு ஆடுகள் தப்பிக்க வெள்ளை ஆடுகள் பலிகடா? எம். தாமு

கடல் தாண்டி கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள கறுப்பு ஆடுகளை கசாப்பு கடைக்கு கொண்டு வராமல் வெறும் 500, 1000 ரூபாய்களை மட்டுமே வைத்து வாழ்க்கையை ஓட்டும் வெள்ளை ஆடுகளை கசாப்பு கடையில் வெட்டுவதுதின் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்பது தான் நிதர்சன உண்மை.

500 1000 அறிவிப்பு – மக்கள் மீதான கார்ப்பரேட் பாம்பிங் – பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

ஆதார், மொபைல் வாலன்டர், இ-வாலன்டர் என்று டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும் என்பது நல்ல விசயம்தான். ஆனால் இது மட்டும் கருப்பு பணத்தை ஒழிக்கும் என்று சொல்ல முடியாது. அது நீண்ட காலத்திற்கு பயனளிக்கவும் செய்யாது. வுரிவசூல் நிர்வாகம் தான் கருப்பு பணத்தை ஒழிக்கும்.

அம்பேத்கருடன் ஒரு பயணம் – த.கிருஷ்ணா

உலகில் உள்ள மனிதர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் உள்ளனர். அதே போன்றே பெண், ஆண் என்று பாலினங்களில் வேறுபாடு உண்டு. பணம் இல்லாதவன் ஏழை என்றும், சொத்தும்  பணமும் குவித்து வைத்துள்ளவன் பணக்காரன் என்றும் வித்தியாசப்படுத்தலாம். இவை அனைத்தும் நாம் நேரடியாக உணரமுடியும் என்று நம்பக்கூடிய உண்மைகள். ஆனால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சொல்வதை நாம் ஐம்புலன்களால் உணரவும் முடியாது. உணர முடியாத ஒன்றை கண்களால் பார்க்க முடியாத ஒன்றை தான் இவன் பிறப்பால் உயர்ந்தவன் […]

கேப்டன் லட்சுமி – வசந்தி

பெண்கள் சமூக ஒடுக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டிருந்த நிலையில் குறிப்பாக வட இந்தியாவில் அதிகரித்து வரும் வரதட்சனை, உடன்கட்டை ஏறுதல் போன்ற பழமைவாத ஒடுக்குமுறைகளை வேரறுக்க 1980ம் ஆண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் தொடங்கப்பட்டது. அதன் முதல் மாநாடு சென்னையில் நடந்தது. முதல் ஐந்து தலைவர்களில் ஒருவராக கேப்டன் லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குழந்தை .. உலகை சந்தித்த முதல் மூன்று நிமிடங்களில் – பேரா. சோ. மோகனா

அம்மாவின் இருட்டான கருவறையைவிட்டு வெளியேறி இந்த புவியைத் தரிசித்த புத்தம் புதிய மலரின் விரிதலில் உருவாகும் மாற்றங்கள்..அப்பப்பா சொல்லி மாளாது. அத்தனை அற்புதங்கள் அதன் உடலில். கற்பனைக் கெட்டாத அதிசயங்கள் நிகழும் கணங்கள் அவை. அனைத்தும் வாழ்வதற்கான போராட்டமும், அதன் புதிய சூழலுக்கான தற்காப்பு நிகழ்வுகளும், தகவமைப்பும் தான். அனைத்தும் இயற்கையின் கொடைகள்தான்.

வாய்மையே வெல்லும் – செல்வராஜ்

காந்தி என்ற பெயருக்கு ஏற்றவகையில் உண்மை மட்டும் பேசுனா போதாது, பொய் சொன்னாதான் வேலை சீக்கிரமாக முடியும் என பொய் சொல்ல ஆரம்பிக்கும் காந்தி பின்னர் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். பின்னர் பொய்யையே உண்மையாக மாற்றி கொள்கிறார்.

தேச விரோதிகள் – சம்சுதீன் ஹீரா . . . . . !

இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது இந்தியாவின் எதாவது ஒரு பகுதியில் இஸ்லாமியர்களின் மீது தாக்குதல் நடந்து கொண்டிருக்கலாம், அல்லது தாக்குதலுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுக்கொண்டு இருக்கலாம்,