ஊழல் ஒழிப்பு என்பது எப்போது, யாரால் சாத்தியம்?

சட்டமன்றம்/நாடாளுமன்றம்/உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஏன் பல கோடிகளைக் கொட்டிப் போட்டியிடுகிறார்? சேவை செய்யவா கோடிகளைச் செலவு செய்கிறார்? போட்டதை வட்டியும், முதலுமாய் எடுக்கத்தானே.

ஆபிரகாம் லிங்கன்: கொலைக் கதை சொல்லும் கனவு…

“ நான் ரொம்பவும் பயந்தும் மிரண்டும் போனேன். என் முன்னால் ஒரு சவம் படுக்க வைக்கும் பாடை இருந்தது.அதில் ஒரு பிணமும் கூட இருந்தது. எனக்கு அதைப் பார்க்க ரொம்பவும் பயமாக இருந்தது. அந்தப் பிணத்தின் மேல், இறுதிச் சடங்கிற்கு உரிய அனைத்து வகை உடுப்புகளும் மிகுந்த அலங்காரத்துடன் இருந்தன. அந்த பிணத்தைச் சுற்றி ஏராளமான இராணுவ வீரர்கள் இம்மியும் அசையாமல் அதனைப் பாதுகாத்து நின்று கொண்டிருந்தனர். அவ்விடத்தில் லட்சக் கணக்கான கணக்கிலடங்கா மக்கள் கூடி பிணத்தைப் பார்த்து கதறி கதறி அழுதனர். விம்மி விம்மி மறுகினர். வாயை மூடி தேம்பித்தேம்பி அழுதனர். ஆனால் அந்த பிணத்தின் முகம் மட்டும் மூடப்பட்டு இருந்தது. எனக்கு அது யாரென தெரியவில்லை.அனைவரும் ரொம்பவும் துக்கப்பட்டு விசனத்துடன் அழுது கொண்டே இருந்தனர். அவர்களை யாரும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.கட்டுப்படுத்தவும் இல்லை.”

சோட்டா மோடியும், படா மோடி யும் …

“சுஷ்மா என் குடும்ப நண்பர். அதைத் தாண்டி சட்டரீதியான (தொழில்ரீதியான) உறவும் எங்கள் குடும்பங்களுக்குள் இருக்கிறது. சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்குச் சட்ட ஆலொசனை வழங்கிவருகிறார். சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார்.” கூடவே, லலித் மோடி தனக்கும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜேவுக்கும் இடையேயுள்ள 30 ஆண்டு உறவைப் பற்றியும் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

அரிசி இலவசம், தண்ணீர் பத்து ரூபாய்… எது சாதனை?

தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்டால் கூட தரத்தயங்கும் மனநிலைக்கு தமிழக மக்களை மாற்றியதும் அதிமுக அரசின் பெருஞ்சாதனையென்றே நிச்சயம் கூறலாம். பேருந்திலொ அல்லது ஏதேனும் பயணங்களிலொ தண்ணீர் இல்லையென்றால், யாருக்கும் இப்போதெல்லாம் அருகில் இருப்பவரிடம் கேட்கத்தோன்றுவதில்லை. அப்படியே கேட்டாலும் சிலர் கொடுப்பதில்லை. கொடுப்பவர்களோ எனக்கு இன்னைக்கு புல்லா வேணும், சும்மா வாயை நனைச்சிட்டு கொடுத்துருங்க என்று சொல்லிக்கொடுக்கும் நிலை பலருக்கு. சும்மா சும்மா தண்ணிய குடிச்சிக்கிட்டே இருக்காதே, பாட்டில காலி பண்ணிடாதே, தவிச்சதுன்னா ஒரு மடக்கு குடிச்சுக்கோ என குழந்தைகளைப் பார்த்து பெற்றோர்கள் சொல்லும் நிலை.

யோகா, இரக்ஷா பந்தன், அடுத்து..?

உலகெங்கும் யோகா நடந்த புகைப்படங்களையும், யோகா குறித்த மையங்களையும் வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள். யோகா யாருக்கானது என்றும், ஏன் என்றும் உங்களுக்குப் புரியும்.

மேகியை விசமாக்கியது எது? – என். சிவகுரு

குழந்தைகள் மத்தியில் பிரபலமான முட்டை வடிவிலான கிண்டர் ஜாய் (KINDER JOY) எனும் சாக்லேட் போன்ற பண்டம் (ரூ 30) உலகத்தில் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பொருள்.