கோவை குண்டுவெடிப்பும் மௌனத்தின் சாட்சியங்களும்…

இஸ்லாம் எனக்கான வாழ்க்கை நெறி. என் தனிப்பட்ட வாழ்கையை கண்ணியமாக வாழ இஸ்லாம் காட்டிய கோட்பாடுகளை நான் ஈமானோடு இறையச்சத்தோடு பின்பற்றுகிறேன். ஆனால் சமூகத்தோடு என்னை தொடர்புபடுத்தி கொள்ள எனக்கு அரசியல் பார்வை தேவைபடுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்க சிந்தாந்த வலிமையுள்ள அரசியல் தேவை. ஒரு இஸ்லாமியனாக இங்கு நான் அச்சமின்றி வாழ நிச்சயமாக ஒரு அரசியல் தேவை

வன்னியர்கள் வாழும் காலத்தையெல்லாம் உழவுத்தொழிலுக்கே அர்ப்பணித்தவர்கள்…

இதுவரை நான்கு நாவல்களும் நான்கு  சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று கவிதை தொகுப்புகளும்  ஒரு   நடுநாட்டுச்  சொல்  அகராதியும் படைத்திருக்கும் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் (42)  விருதாச்சலம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தொழில்நுட்ப பணி புரிகிறார். கனடா இலக்கியத்  தோட்டம் விருது, சுந்தர ராமசாமி விருது, தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெற்றவராவார். “அஞ்சலை” நாவலின் வழியே பிரபலமாக அறியப்படும் கண்மணி குணசேகரன் அந்நாவலில் ஆதிக்க சாதித் திமிரை எந்த இடத்திலுமே பதிவுறாமல்  தலித்துகளுடனான அன்யோன்னியமான வாழ்வை […]

விஷவாயு மரணச் செய்திகளும், தோட்டியின் மகனும் …

(எழுத்தாளர் சுந்தரராமசாமியின் பிறந்த நாளன்று, எழுத்தாளர் ‘தகழி சிவசங்கரன்’ எழுதி, சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’ நாவல் அறிமுகத்தை வாசிப்புக்காக வழங்குகிறோம்.) வாசிக்கும் பழக்கம் அறவே விடுபட்ட நிலையில் மீண்டும் ஏனோ இதன் மேல் ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொள்ள, எளிமையான தமிழ் புத்தகங்களை வாசிப்போம். என்று ஆரம்பித்து ச.தமிழ்செல்வன் நூல்களை வாசிக்கலானேன். எங்கள் பழைய புத்தக அலமாரியில் சில புத்தகங்கள் வாசிக்கும் பட்டியலை நீட்டியது. அப்படி அகப்பட்டது தான் “தோட்டியின் மகன் “. இந்த வார்த்தை, […]

மணற்குன்று பெண் – (புத்தகக் கண்காட்சி சிறப்பு பதிவு)

மணற்குன்று பெண் கோபோ ஏப் | தமிழில் ஜி.விஜயபத்மா | பக்:351 | விலை: 220/- | வெளியீடு: எதிர் வெளியீடு பூச்சிகளை உணவுப் பொருளாக பயன்படுத்தும் ஜப்பான் சமூகம் அவைகளை வெறும் உணவுப் பொருளாக சுருக்கி விடாமல் மனித வாழ்வினூடாக அவைகளின் குணநலங்களை மனித நடவடிக்கைகளுக்கு பொருத்தி பார்க்கும் உளவியல் பழக்கம் ஜப்பான் இலக்கியத்துகுண்டான தனிச்சிறப்பாகும். சிக்மன்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுகளில் மிகமுக்கியமாக கருதப்படும் இடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus) எனும் உளவியல் சிக்கலுக்கான மனோநிலைக்குல் அகப்பட்ட […]