இப்போது பரிணாமம் நிகழவில்லையா . . . . . . ?

எந்த உயிரும் நேரடியாக பூமியில் தோன்றவில்லை, ஒற்றை செல் சிற்றுயிரிலிருந்து காலப்போக்கில் ஒவ்வொரு வகை உயிரும் பரிணாமம் அடைந்தது என்பது டார்வின் முன்வைக்கும் பரிணாமம் குறித்தான கோட்பாடு. இக்கோட்பாடு இன்னும் 100 சதவீதம் நிறுவப்படவில்லையெனினும், உயிரின போக்குகளை புரிந்துக் கொள்வதன் மூலம் இக்கோட்பாடு உலகளாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உயிரின வளர்ச்சி ஏணிப்படி குறித்து பரிணாமம் குறித்தான கோட்பாடு சொல்வது என்னவென்றால்.. ஒற்றை செல் உயிர்களிலிருந்து புழு வகை உயிர்கள் தோன்றின.. புழு வகை உயிர்களிலிருந்து மீன்கள் […]

சீனப் புரட்சியின் ஒரு பெரும் அத்தியாயமான மாவோவின் நீண்ட பயணம்…

சீனப் புரட்சியின் திருப்புமுனையாக அமைந்த நெடும் பயணத்தின் நெடுகிலும் விதைக்கப்பட்ட நாற்பதாயிரம் போராளிகள், 1946 அக்டோபர் முதல் தேதி விடுதலை பெற்ற சீன மக்கள் ஏந்திய கொடிகளில் நட்சத்திரங்களாக மலர்ந்தார்கள்.

விடுதலைப் போர்க்களத் தோள்கள் எவருடையவை?

“ஓரு துளி நீர் கடலைச் சேர்ந்தவுடன் தனது அடையாளத்தை இழப்பது போல அல்லாமல், மனிதன் தான் வாழும் சமுதாயத்தில் தனது இயல்பை இழந்துவிடுவதில்லை. மனிதனின் வாழ்க்கை சுயேச்சையானது. அவன் பிறப்பெடுப்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மட்டுமல்ல, தனது சொந்த வளர்ச்சிக்காகவும்தான்.” டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் அன்றே சொன்ன இந்த வரிகளை இன்றைய இந்தியாவில் விரிவாக எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. மறுபடி மறுபடி எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் மற்றவர்களைச் சார்ந்துதான் வாழ்கிறோம் என்றாலும், யாரும் அவரவரின் […]

காஷ்மீர் – வரலாறும், வாழ்க்கையும்…

காஷ்மீர் பூலோக சொர்க்கம் என அழைக்கப்படும் பிரதேசம். கலவரம், போராட்டம், வன்முறை, அடக்குமுறை, தீவிரவாதம் என பல்வேறு பிரச்சனைகளால் அது பூலோக நரகமாக மாறியது எவ்வாறு? அங்கு நிரந்தரப்பதட்டம் நிலவ காரணம் என்ன?ஏன் அதற்கு மட்டும் விசேஷ அந்தஸ்து ? காஷ்மீர் இந்தியப்பகுதி என இந்தியாவும், பாகிஸ்தானுக்கு சொந்தம் என அந்நாடும் கூறி வருவதை அடிக்கடி நாம் ஊடகங்களில் காண்கிறோம். “எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம் பாகிஸ்தானும் வேண்டாம் எங்களுக்கு வேண்டியதெல்லாம் பரிபூரண சுதந்திரம்,நிம்மதியான வாழ்க்கை,நிலையான அமைதி மட்டும் […]

யோகா வரலாறு.

சமீபத்தில்  அதிகமாக  விமர்சனமாக்கப்பட்ட  வார்த்தை  “யோகா”. பிஜேபி  என்ற  கட்சி உருவாவதற்கு எழுபது ஆண்டுகளுக்கு  முன்னமே  யோகா  வெளிநாட்டினரிடம்  பிரபலமாகிவிட்டது.  ஆட்சியில்  அமருவதற்கு  இருபது  வருடங்களுக்கு  முன்னமே  யோகா  வெளிநாட்டினரிடம்  பல  பரிமாணங்களை  எடுத்துவிட்டது. மருத்துவ  மற்றும் அறிவியல்  பூர்வமாக  ஆராய்ச்சிகளும் நடந்துவிட்டன.  அப்படி  இருக்கும்  போது பிஜேபி  இப்போது  யோகாவுக்கு  இவ்வளவு  முக்கியத்துவம்  கொடுப்பதின்  நோக்கம்  என்ன? பிரதமர்  மோடி  அவர்கள்  குஜராத்தின்  முதல்வராக  இருந்த  போது  தன்  மாநிலத்தில்  யோகாவை  பள்ளிகளில்  முதன்மை  படுத்தாமல் […]

மீண்டெழும் மாற்றுகள் – 1

முதலாலித்துவம், மூலதனம், உழைப்பு, உபரி மதிப்பு, சமூக நீதி, பெண்ணியம், உலக பொருளாதாரம், உலக அரசியல் போன்றவற்றை பற்றி பேசும் பொழுது தவிர்க்க முடியாதவர் கார்ல் மார்க்ஸ். உழைக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை, திறமையை அழிப்பது மட்டுமின்றி பூமியின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் முதலாலித்துவத்தை பற்றி முதன்முதலில் கண்டு உலகறியச் செய்த பெருமை அவரையேச் சேரும். ஆனால் முதலாலித்துவ மீடியாக்கள் அவரை கம்யூனிசத்தின் தந்தை என்று மட்டுமே வர்ணிக்கிறது. மார்க்ஸ்-ஏங்கல்ஸ் முதலாலித்துவத்தை […]

சுதந்திரப் போராட்ட தியாகியா வாஞ்சிநாதன் . . . . !

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் […]

மத்திய கிழக்கின் வரலாறு – 1 (புதிய தொடர்)

இன்றைக்கு மத்தியகிழக்கு என்கிற வார்த்தையைக் கேட்டாலே, ‘அது கலவர பூமியாச்சே’ என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் வரும். மத்தியகிழக்கு என்றால் என்ன? அது எந்தெந்த பகுதிகளையும் நாடுகளையும் உள்ளடக்கியது? இன்றைக்கு மத்தியகிழக்கு என்பது பொதுவாக லிபியா முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆனால் மத்தியகிழக்கு என்கிற பெயரை மத்தியகிழக்கில் வாழும் மக்களேகூட 50-60 ஆண்டுகளுக்குமுன்னர் பயன்படுத்தியதில்லை. ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்துதான் அப்படியான பெயரை வைத்தன. பிரிட்டனிலிருந்து கிழக்கே வெகுதூரத்தில் சீனா இருந்தமையால் அது […]

பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை பற்றி அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கரை புகழ்பவர்களுக்கு தனிப்பட்ட நலன்கள் காரணமாக அவரது கொள்கைகளுக்கு எதிரான இடத்தில் கொண்டு போய் நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது. ஆளும் வர்க்கமும், அவர்களது இதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்ற போதிலும், அவரை பின்பற்றுபவர்களாக கூறிக்கொள்பவர்களும் அதையேதான் செய்து வருகின்றன. ஆளுங்கட்சியினர் அம்பேட்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாடப்போகிறோம் என்று ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்ற நிலையில், மிக வெளிப்படையாக, ஐதரபாத மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கெதிராக அநீதிகள் இழைக்கப்பட்டு, அதில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. […]

இஸ்ரேலை ஆதரித்தாரா அம்பேத்கர்?

‘இஸ்ரேல் உருவாவதை அம்பேத்கர் ஆதரித்தார்’ என்கிற கருத்து சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரால் பரப்பப்படுவதைப் பார்க்கமுடிகிறது. இது ஒரு தந்திரமான பொய் என்றுதான் சொல்லவேண்டும். ஹிட்லரால் யூதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலத்தில், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிற முயற்சியில் இருந்தனர் சியோனிசவாதிகள்.  (உலகில் இருக்கும் ஏராளமான மதங்களைப்போன்று யூதமும் ஒன்று. ஆனால் சியோனிசம் என்பது யூதர்களைத்தவிர அனைவரும் கீழானவர்கள் என்றும், பாலஸ்தீன நிலத்தில் யூதர்களைத்தவிர மற்ற எவரும் வாழக்கூடாது என்று சொல்கிற ஒரு இனவெறித்தத்துவம்). அதனால் பாலஸ்தீனத்தில் […]