ஜனநாயகம், குடும்ப அமைப்பிலாவது சாத்தியமாகட்டும்!

சமூக அமைப்பில், உழைப்பிற்கான எந்த தளமானாலும் அங்கு பறிக்கப்படும் உரிமைகளை குற்றம் சாட்டவோ, உழைப்பிற்கான வெகுமதியை வற்புறுத்தி பெறவோ,அனைவரும் இணைந்து முடிவுகளில் பங்கேற்கும் முறைகளும், ஒருங்கிணைக்கும் சங்கங்களும் இருபாலருக்கும் பொதுவானதே (பெயரளவிலாவது இது தொடர்கிறது). ஆயினும் இங்கே குழுவாக, சமவுரிமையுடன் வாழ்வது எனும் தோற்றத்தை தர முயலும் குடும்ப அமைப்பில் பாலின வேறுபாடு, பொருளீட்டல் மற்றும் மதம் சார்ந்த பழக்க வழக்கங்களின் பொருட்டு சமத்துவம் ஒரு தோற்ற மாயையாகிவிடுகிறது. குடும்பத்தின் உள் விதிக்கப்பட்ட ஒழுங்கை ஏற்றுநடக்கும் போது […]

மீண்டுமொரு பாலியல் வல்லுறவு; அர்த்தமற்ற உங்கள் பிரசங்கங்களை தொடங்குங்கள் !

“கலாச்சாரத்தை விழுந்து விழுந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் காவல் தெய்வங்களே!  நீங்களெல்லாம் அறிவுரை கூறவும், பிரசங்கத்தை பொழியவும் மீண்டும் மனிதத்திற்கு எதிரான குரூரங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன.” மும்பையில் 23 மூன்று வயதான பெண் பத்திரிக்கையாளர், ஐந்து மனிதவடிவு மிருகங்களால் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த முறை பாதிக்கப்பட்ட பெண் எந்த ஆண் நண்பனுடனும் சினிமா பார்க்க செல்லவில்லை, 9 மணி இரவிற்கு மேல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கவில்லை, சமூகத்தின் பழிபோடும் கயமைத்தனத்துக்கு இரையிடும் வகையில் கவர்ந்திழுக்கும் உடையணியவும் இல்லை. தனது பணியை […]

ஆசிட்டுக்கு தடை! வன்கொடுமைக்கு அனுமதியா ?

‘வினோதினி’ என்ற பெயரை நாம் அத்தனை விரைவில் மறந்துவிட முடியாது. கோரமான ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி, மிகுந்த துடிதுடிப்புக்கு பிறகு அவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும்  பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களும், தனி மனிதர்களும் பெண்ணுக்கு உதவி செய்யபறந்தனர். வினோதினி மரணமடைந்துவிட்டார். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக தாக்கப்பட்டாரோ அந்தக் காரணங்கள் இந்த சமூகத்தில் இம்மிபிசகாமல் இருந்துகொண்டுள்ளன. வினோதினி தாக்குதலை முன்னிட்டு நடந்த விவாதங்கள் ஆசிட் வீச்சை கட்டுப்படுத்துவது எப்படி? என்ற திசையில் சென்றன. நீதிமன்றங்களும்இதே திசையில் […]

சமயலறையிலிருந்து விடுதலை …

இந்த தலைப்பில் எழுதுவது சற்று சலிப்பாக இருக்கலாம். நிலைமைகள் மாறிவிட்டனவே. பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று துச்சமாக நினைக்கலாம். ஆனால் இதை பேசுவதை நாமிருக்கும் சமூகச் சூழல் கட்டாயமாக்குகிறது. அட! எத்தனை ஆண்கள் சமயலறையில் பெண்களுக்கு”உதவி” செய்கிறார்கள் தெரியுமா? என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த “நீயா நானா” நிகழ்ச்சியின் தலைப்பு: பெண்களுக்கு ஆண்கள் சமையலறையில் உதவலாமா? கூடாதா? ”நான் ஆண். என் அம்மாவிற்கு உடல் கோளாறு ஏற்பட்ட […]