சமநீதியை மறுக்கும் அநீதிகளை மறுவரையறை செய்வோம். . . . . . . !

அட அந்த பொண்ணு மேல தான்பா தப்பு இருக்கும். சும்மா ஒன்னுமில்லாம யாராவது கொலை செய்வாங்களா? இது போன்று அஸ்வினி விஷயத்தில் மட்டுமல்ல சுவாதி தொடங்கி இந்துஜா வரை ஆணாதிக்க சிந்தனைகளுக்கு பல்லாக்கு தூக்கும் விஷமங்களை மிக எளிதாக சமூக வலைதளங்களில் தூவி விடுகின்றன. இந்த போக்குதான் அடுத்த அடுத்த வன்முறைகளுக்கு விதையாக அமைகிறது. சரி, அந்த பெண்களிடமே தவறு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்கு அந்த பெண்ணை சிதைப்பதும், கொலை செய்வதும் தான் தீர்வா? இந்த […]

கௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி

கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்

தலாக் … தலாக்… தலாக் ….

இந்த முத்தலாக் என்கிற விஷயம் பற்றி எனக்கு முதலில் அறிமுகம் ஆனது 8 வருடத்திற்கு முன்னாள் .அதை அறிமுகப்படுத்தியவர் பெனாசீர் என்கிற ஒரு இஸ்லாமிய பெண் .அவருக்கு அப்பொழுது வயது 27 . அதற்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் துபாய் போன கணவர் போனில் முத்தலாக் செய்து பாதிக்கப்பட்டவர் அவர். சிரித்து பேசி கலகலவென்று இருந்தாலும் தனிமையில் சோகம் சூழ்ந்தே இருக்கும் அவரின் முகத்தில் .ஆண்களையும் கொஞ்சம் வெறுக்கவே செய்தார் பாதிப்பு […]

மாதர் அமைப்புகள் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் . . . . . . . !

கல்வி என்பது தனிமனித வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இன்றோ கல்வி கடை சரக்காக மாறி, யார் வேண்டுமானலும் கல்வி நிலையங்களை துவங்கலாம் என்ற காரணத்தால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.  உலகமய, தனியார்மயக் கொள்கையால் ஏழை மிகவும் ஏழையாக ஆக்கப்பட்டு அவர்களின் குழந்தைகள், தான் என்ன ஆகப்போகிறோம் என்பதே தெரியாமல் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  ஆயினும் பல தடைகளைத் தாண்டி கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர […]

என்றும் நமக்கே தானோ தடை? – சுசீந்திரா

இங்கு மிக எளிதாக ஒரு ஆணை மையமாகக் கருதி படமும் பாடல்களும் எழுதி விட முடிகிறது. ஆனால், ‘பெண்’ என்ற வரையறை கொண்டு சமரசமில்லாமல் ஒரு படத்தை அத்தனை சுலபத்தில் உருவாக்கம் செய்ய முடியவில்லை;

கொடூரமாக கொல்லப்பட்ட 3 பெண்ணுடல்கள் !

பாலியல் கல்வி வேண்டும் என்பது ஒரு தீர்வு. பெண்ணின் உடல் பற்றிய நியாயமான புரிதல் வேண்டும். ஒவ்வொரு குடும்பமுமே இவ்விசயத்தில் சரியாக புரிந்து செயல்பட வேண்டும். ஆணாதிக்கமும், சாதியும் கொண்ட நமது சமூகம் – குடும்ப அமைப்பை அப்படி உருவாக்கவில்லை.

செங்குருதியில் மலர்ந்த மகளிர் தினம் . . . . . . . . . !

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நட்த்த வந்தோம் என்ற பாட்டு சித்தன் பாரதியின் வரிகளுக்கேற்ப வீட்டிற்குள் இருந்த பெண் சமுதாயம் வானை நோக்கி பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டது பல்வேறு பெண்களின் போராட்டங்களும், அதன் வெற்றியுமே. உலக மகளிர் தினமாக மார்ச் 8 ஆரவாரமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் பல வியாபார நிறுவனங்களின் கொண்டாட்ட தினமாகவும், சலுகை தள்ளுபடிகளை அறிவிக்கப்படும் நாளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு கோலப்போட்டி, […]

ஹாசினி நந்தினி தொடரும் பாலியல் வக்கிரங்கள், என்ன செய்யப் போகிறோம் நாம்?

பிறப்பது ஒரு இடம், பயணிப்பது மற்றொரு இடம் என்பதனாலோ நதிகளுக்கு பெண்கள் பெயர்களை வைத்திருக்கிறார்கள். புன்னிய நதிகளாக போற்றப்படும் நாட்டில் பெண்களின் கதியோ கேள்விக்குறி. ஒவ்வொரு 53 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் கொடுமை நடக்கிறது. ஒவ்வொரு 77 நிமிடங்களில் ஒரு வரதட்சனை மரணம் நிகழ்கிறது. அப்படியெனில் ஒரு நாளில் 24 மணி நேரமும் எத்தனை இடர்பாடுகள் பெண்களுக்கு. பெண்கள் மீதான வன்முறை எல்லா தளங்களிலும் பல்வேறு வடிவங்களில் நீக்கமற நிகழ்த்தப்படுகின்றன. பெண் கருக் கொலைகள், […]