ஒரு போராளியின் முடிவும், சில சிந்தனைகளும் …

தோழர் நீலவேந்தன் மறைவு துயரமானது. ஏனோ மனம் அவர் தானாக எடுத்த இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எவ்வளவு சிறந்த லட்சியமாக இருந்தாலும் அதை அடைவதற்கு தன்னுயிரை மாய்த்துக் கொள்வது வழி ஏற்படுத்தாது.

தோழர் நீலவேந்தன் எழுதிய இறுதிக் கட்டுரை … கசப்பிலிருந்து தொடங்குவோம்…!

(தோழர் நீலவேந்தன் எழுதிய இறுதிக் கட்டுரை இது. 2 நாட்களுக்கு முன்பு இந்தக் கட்டுரையைக் கொடுத்து சிரித்துப் பேசிய நீலவேந்தன். 25 ஆம் தேதி அதிகாலை தன் உயிரை ஈந்தார். சமூக விடுதலைப் போராட்டத்தை ஓரடி முன் நகர்த்த வேண்டுமென, வாழ்க்கையையே தத்தம் செய்திருந்த அந்தத் தோழன் மறைவுக்கு – ‘மாற்று’ தனது அஞ்சலியை செலுத்துகிறது.) சமூகத்தையும் சக மனிதர்களையும் உளமாற நேசிக்கிற ஒரு தலித்துக்கு வருடத்தின் 365 நாளுமே துக்க நாட்கள்தான் என்றாலும், ஆண்டுதோறும் செப்டம்பர் […]

வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 2

 வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1 புதியதாக படிப்பவர்கள் இந்த முதல் பகுதியை படித்துகொள்வது நலம். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமும் அவை உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்களும் மேன்மேலும் உற்பத்தியில் உபரியை உருவாக்கி மானுடக் கூட்டத்தில் ஒரு சிறுபகுதியாவது நீண்டகால நோக்கில் மானுட வாழ்க்கையையும் அது நடைபெறும் சூழலையும் ஊன்றிக் கவணித்து அதில் மாற்றம் கொண்டுவர சிந்திக்கவும் செயல்படவும் சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. இந்த சாத்தியங்கள் காலம் காலமாக தமது காலத்திற்குரிய வரம்புகளோடு மானுட வாழ்க்கையையும் அது இயங்கும் சூழலையும் […]

தமிழ்த் திரைப்படங்கள் உறவும் ஊடாட்டமும்

1970 களிலிருந்து தமிழ்த் திரைப்படத்தை பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன். ஞானஒளி நான் பார்த்த முதல் திரைப்படம். சிவாஜிகணேசன், சாரதா, மேஜர் சுந்தர்ராஜன் நடித்தப் படம். பி.மாதவன் இயக்கிய படம். நான் கேட்ட முதல் திரைப்பாடலும் இந்த படத்தில் இடம் பெற்று டி.எம்.எஸ் பாடிய `தேவனே என்னைப் பாருங்கள் என்பதுதான். நான் சமீபத்தில் பார்த்தப் படம் துரை. செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல். ஞானஒளிக்கும் எதிர் நீச்சலிற்கும் இடையில் நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த […]

திராவிடர் – ஆரியர் முரண்பாடு இன்றும் முடியவில்லை … பேராசிரியர் அருணன்

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு. மூடநம்பிக்கைகளில் இருந்து விடுதலை, தமிழரின் தத்துவ மரபு, பெரியாரின் பெண்ணியம், காலந்தோரும் பிராமணியம் 8 தொகுதிகள் உள்ளிட்டு ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள தோழர் அருணனை சந்தித்தோம். அவர் பெரியாரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாற்று இணையத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணல் …

‘தந்தை பெரியார்’ காலாவதியாக வேண்டும் !

தலைப்பு உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். ஆனால், அதுதான் ‘தந்தை பெரியாருக்கு’ அர்த்தமுள்ள நினைவு கூறலாக அமைந்திடும்.

அவர் சாதீயத்துக்கு எதிராக சுயமரியாதையை முன்நிறுத்தினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவை புகட்டினார். பெண் விடுதலைக்கு உண்மையான குரல்கொடுத்த மனிதராக இருந்தார். பெரியார் விரும்பிய மாற்றங்கள் இங்கே ஓரளவு நடந்திருக்கின்றன.

பெண்ணுக்கு மரியாதை – மாற்றத்தின் முதல் படி !

‘மரியாதை’ என்பதின் பொருள் என்ன? தன்னை விட பெரியவர்களை உயர்வாக எண்ணுவது மட்டும் தானா?… இல்லை!! ஒருவரின் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அளவற்ற அன்பே மரியாதை. இந்த அளவற்ற அன்பால் என்ன பயன் ? அன்பு, தன்னை போல் அவரும் ஒரு சக மனிதர் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும். இந்த புரிந்துணர்வால் என்ன பயன்? அவருக்கு நாம் தீங்கு விளைவிக்கக்கூடாது. அவருக்குரிய எல்லா வாய்ப்புகளும் நியாயமாக கிடைக்க நாம் வழிவிட வேண்டும். அவரை நாம் அடிமையாக நடத்தக்கூடாது […]

பால்தாக்கரேயும், மகாராஷ்டிர தலித்துகளும் – ஆனந்த் டெல்டும்டே

பால்தாக்கரேவின் மரணத்திற்கு பின்னான நிகழ்வுகள் பலரின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஊடகங்களில் சிலரால் எரிச்சலூட்டும் வகையில் அவர் மீதும், அவரின் பண்பின் மீதும் பொழியப்பட்ட புகழுரைகள் பொருத்தமற்றதாகவே இருந்தன.

‘இறந்தவர்களை பற்றி நல்லதை பேசு அல்லதை பேசாதே’ என்ற லத்தீன் பொன்பொழியின் பின்னே எல்லா நேரங்களில் ஒளிந்து கொள்வது அரசியல் நாகரிகம்

என் கல்வி.. என் உரிமை..

ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை. அறிவு என்பது ஒரு குழுவுக்கோ ஒரு சமூகத்திற்கோ சொந்தமானது அல்ல.அது அனைவருக்குமானது.ஆனால் அதை அடைய இன்று வரை பல குழந்தைகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் மூன்றாம் கட்ட நாடுகளாக இருக்கும் ஒரு நாட்டில் அது இன்னமும் எட்டாக் கனவாகவே உள்ளது. கல்வி என்பது என்ன? இந்த உலகம் எப்படி இயங்குறது என்று சொல்லித் தருவது, நம் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று […]