மத்திய பட்ஜெட் 2017 – 18: அன்று தேர்தல் ஜும்லா, இன்று பட்ஜெட் ஜும்லா . . . !

உலகின் பல நாடுகளில் அரசாங்களின் பட்ஜெட், அரசின் பல் வேறு தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. அரசுகளின் கொள்கைகளின் அடிப்படையில், அந்த அந்த ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், ஒப்புதல்கள் என்ற அளவிலேயே அவை அமைகின்றன. ஆனால், இந்தியாவில் அரசாங்கத்தின் பட்ஜெட் மிகப் பெரிய நிகழ்வாகப் பார்க்கவும், பேசவும் படுகிறது. ஏனெனில், பட்ஜெட் உரையில் பல புதிய அறிவிப்புக்கள் மற்றும் வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. அரசின் அடிப்படைக் கடமைகள் கூட, சிறப்புத் திட்டங்கள் என்ற பெயரில் விளம்பரப் படுத்தப் படுகின்றன. […]

வருத்தமளிக்கும் நிதி ஒதுக்கீடு . . . . . . . !

தமிழகத்தில் புதிதாக மாற்றத்தை உருவாக்க போகிறதா? என இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாக நாம் பார்க்கின்றோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கான ஏற்ற நிதி ஒதுக்கீடு என்று அவர்களே தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் , வேளாண்மை,வேலைவாய்ப்பு இவற்றிக்கான நிதியை அதிகம் ஒதுக்கிட வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள நிதி அதற்கு ஏற்றதாக அமைத்த என்பது கேள்விக்குறிதான்? இந்த நிதி ஒதுக்கீடு ஒரு நடுத்தர வர்க்கத்தின் வறுமை நிலைமையை மாற்றப்போகிறதா? […]

ரகுராம் ராஜன் – தொடரும் அபத்த விவாதங்கள் …

நாடுகளுக்கிடையேயான பண்டப் பரிமாற்றங்கள் என்பது அந்தந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களுக்குள் அடங்கியிருக்கும் சமூகவழியில் அவசியமான சராசரி உழைப்பை சார்ந்திருக்கிறது. இதையொட்டியே நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் தீர்மானிக்கப்படுகிறது. நடைமுறையில் இந்த தீர்மானமான புள்ளியைச் சுற்றியே சர்வதேச நாணய மதிப்பு அலைவுறும். இந்த அலைவை தீர்மாணிப்பது ஏற்றுமதி-இறக்குமதியே. உலகமயமாக்கல் கட்டத்தில் இது ஊகவணிகத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி அலைவுறும் வேகம் அதிகரித்துவிட்டது.

மனந்தளராத விக்கிரமாதித்யன் ! (மூலதனம் வாசிப்பு)

மாற்று இணையதளம் தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ‘மூலதனம் – இணைய வாசகர் வட்டம்’ தொடங்கப்படுகிறது. சென்னையில் 3 மையங்களில் செயல்பட்டுவரும் நமது நண்பர்கள் – இந்தப் பகுதியில் தொடர்ந்து எழுதவும், விவாதிக்கவும் செய்வார்கள். இணையத்தில் தொடர்ந்து தொடர்பில் இருப்பது குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் அடுத்த கட்டுரையில் வெளியாகும்

தொலைந்துபோன எனது பணம் ரு.28 லட்சம் …

எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட 28 லட்சத்தை தொலைத்துவிட்டிருக்கிறேன். நான் மட்டுமா, என் அம்மாவும் சேர்த்து தொலைத்திருகிறார். எங்கள் குடும்பத்திற்கென இருக்கும் ஒரே சொத்தான வீட்டின் மதிப்பு ரூ.30 லட்சம்.

எந்த முறையும் இது அவர்களின் அரசு …

முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான வாக்காளர்கள், பல ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மை அரசு, கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிய தனி நபர் துதி, மேலும் இந்த முறை ஊடகங்கள் சொன்னது நடந்தேவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பே ‘பங்குச் சந்தைகள்’ வரலாறு காணாத உயர்வைக் கண்டன, உடனே செய்தித் தாள்கள் அதற்கு ‘மோடி விளைவு’ என்று பெயரிட்டார்கள். புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் 10 கட்டளைகள், 100 நாட்களுக்கான திட்டங்கள் என ஒரு பக்கம் கவர்ச்சி அறிவிப்புகள் வந்தபடியிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் மக்களிடம் […]

அன்னிய மூலதனம் ‘டிஸ்கனெக்டிங் பீப்பிள்’ …

கனெக்டிங் பீப்பிள் (Connecting people) என்ற நோக்கியா வாசகம் டிஸ்கனெக்டிங் பீப்பிள் (Disconnecting people) என மாறி 5 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது. இதற்கு நோக்கியா நிறுவனம் சூட்டிய பெயர், விருப்ப ஓய்வுத் திட்டம். அதிகமாக தமிழ் குரல் எழுப்பிய இயக்கங்களோ, தேசியக் குரல் எழுப்பிய ஆளும் வர்க்க கட்சிகளோ இந்த வேலைப் பறிப்பு குறித்து வாய் திறக்க வில்லை. காரணம் உலகமயமாக்கல் கொள்கைக்குப் பின், ஒப்பந்தம் செய்வது கொள்ளைக்குப் பின் […]

மோடி ஏன் புறக்கணிக்கப்படுகிறார்? – 2

அரசு – நிர்வாகம் – கார்ப்பரேட்- மோடி மோடி குறித்த கட்டுரை அல்ல இது. மாறாக, சர்வதேச நிதி மூலதனம், நவீன தாராளவாதம் மற்றும் இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் இன்றையத் தேவைக்கு மோடி எப்படி பொருந்துகிறார் என்பது குறித்த விளக்கமே. “ஒரு நவீன அரசு என்பது, பூர்ஷ்வாக் களின் ஒட்டுமொத்த நலன்களையும் கணக்கில் கொண்டு செயல்படும் ஒருநிர்வாகக் குழு என்பதைத் தவிரவேறொன்றுமில்லை.” இவை கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள வாசகங்கள். காலமாற்றத்திற்கும், முதலாளிகளின் தேவை களுக்கும் ஏற்ப அரசின் […]