மத்திய பட்ஜெட் 2017 – 18: அன்று தேர்தல் ஜும்லா, இன்று பட்ஜெட் ஜும்லா . . . !

உலகின் பல நாடுகளில் அரசாங்களின் பட்ஜெட், அரசின் பல் வேறு தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. அரசுகளின் கொள்கைகளின் அடிப்படையில், அந்த அந்த ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், ஒப்புதல்கள் என்ற அளவிலேயே அவை அமைகின்றன. ஆனால், இந்தியாவில் அரசாங்கத்தின் பட்ஜெட் மிகப் பெரிய நிகழ்வாகப் பார்க்கவும், பேசவும் படுகிறது. ஏனெனில், பட்ஜெட் உரையில் பல புதிய அறிவிப்புக்கள் மற்றும் வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. அரசின் அடிப்படைக் கடமைகள் கூட, சிறப்புத் திட்டங்கள் என்ற பெயரில் விளம்பரப் படுத்தப் படுகின்றன. […]

காகிதப் பணம் போனால் கள்ளப்பணம் போகுமா?

இந்தியாவின் ஜிடிபியில் 12 சதத்தின் அளவிற்கு நோட்டு அச்சடிக்கப்பட்டிருக்கிறது. புழக்கத்தில் இருக்கிறது. இது எப்படி தீர்மானிக்கப்படுகிறது. ஏன் அது 10 சதவீதமாக இல்லை அல்லது 20 சதவீதமாக இல்லை. பத்து சதவீதமாக இருந்தால் என்ன நடக்கும் 20 சதவீதமாக இருந்தால் என்ன நடக்கும்?  கருப்புப் பணச் சர்ச்சையை ஒட்டி எனக்கு எழுந்த இந்தக் கேள்விக்கு விடை காணுவதே இக்கட்டுரையின் நோக்கம்.   முதலாளித்துவ அளவுகோள்கள் (Metrics) சரியானது என்ற அனுமானத்திலிருந்து துவங்குகிறேன். காரணம் ஜிடிபி கணக்கிடும் முறை […]

வருத்தமளிக்கும் நிதி ஒதுக்கீடு . . . . . . . !

தமிழகத்தில் புதிதாக மாற்றத்தை உருவாக்க போகிறதா? என இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாக நாம் பார்க்கின்றோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கான ஏற்ற நிதி ஒதுக்கீடு என்று அவர்களே தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் , வேளாண்மை,வேலைவாய்ப்பு இவற்றிக்கான நிதியை அதிகம் ஒதுக்கிட வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள நிதி அதற்கு ஏற்றதாக அமைத்த என்பது கேள்விக்குறிதான்? இந்த நிதி ஒதுக்கீடு ஒரு நடுத்தர வர்க்கத்தின் வறுமை நிலைமையை மாற்றப்போகிறதா? […]

ரகுராம் ராஜன் – தொடரும் அபத்த விவாதங்கள் …

நாடுகளுக்கிடையேயான பண்டப் பரிமாற்றங்கள் என்பது அந்தந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களுக்குள் அடங்கியிருக்கும் சமூகவழியில் அவசியமான சராசரி உழைப்பை சார்ந்திருக்கிறது. இதையொட்டியே நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் தீர்மானிக்கப்படுகிறது. நடைமுறையில் இந்த தீர்மானமான புள்ளியைச் சுற்றியே சர்வதேச நாணய மதிப்பு அலைவுறும். இந்த அலைவை தீர்மாணிப்பது ஏற்றுமதி-இறக்குமதியே. உலகமயமாக்கல் கட்டத்தில் இது ஊகவணிகத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி அலைவுறும் வேகம் அதிகரித்துவிட்டது.

எச்சரிக்கையாக இருப்பது மூலதனத்திற்கு நல்லது !

இந்திய முதலாளிகள் எத்தனை ஏழைகள் என்பதை அண்மையில் வாசித்தபோது பெரிய கழிவிரக்கம் என்னைச் சூழ்ந்தது. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நதெல்லா, இத்தனைக்கும் தாமும் இந்தியர் என்றாலும், இந்தியாவின் மிக அதிகமாக ஊதியம் பெறும் 14 முதலாளிகள் ஈட்டும் மொத்த சம்பளத்தைத் தமது ஊதியமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார்….இதெல்லாம் எந்த ஊர் நியாயம் என்று மனம் மிகவும் வருந்தியது. அதாவது நதெல்லாவின் ஆண்டு ஊதியம் ரூ 525 கோடியாம். நம்மவூர் முன்வரிசை முதலாளியின் ஊதியம் நாற்பது கோடிக்கும் கீழே என்றாகிறது. […]

அசுத்த முதலாளித்துவமும் பரிசுத்த முதலாளித்துவமும்

இன்றைக்கு நெடுஞசாலைகளை அமைப்பதற்கு தனியார்களிடம் PPP போடப்பட்டு அவர்கள் சாலைகள் அமைத்து கட்டணச் சாலைகள் ஆக்கினார்கள். அவர்கள் வசூலிக்கும் அநியாயக் கட்டணத்தை எதிர்த்து மக்கள் எதிர்ப்புக் குரல் கிளம்பும் பொழுது. அவ்ன்தான் முதலீடு செய்திருக்கிறானே எனவே கட்டணம் வசூலிக்கட்டும். சிறிதுகாலம் பொருத்துக் கொள் அவன் அரசிடம் ஒப்படைப்பான் அதன் பிறகு கட்டணம் இருக்காது என்ற சமாதானம் சொல்லப்பட்டது. இப்பொழுது பாருங்கள் ஏற்கனவே அரசிடம் இருக்கும் சாலைகள் தனியாரிடம் விற்கப்படும் தனியார்கள் அதை கட்டணச் சாலையாக்குவார்கள். விற்ற பணத்தை வைத்து புதிய சாலைகள் போடுவார்களாம்.

உழைப்பை எதை வைத்து அளந்து பார்ப்பது?

மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 12 (முந்தைய பகுதி: 11 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) சமூக வழியில் அவசியமான மனித உழைப்பே சரக்கின் மதிப்பு அதெப்படி பொருளின் மதிப்பை அளவிட, உழைப்பை அளவு கோலாக பயன்படுத்த முடியும்? உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? மனிதன் தனது கைகால்களை அசைத்தோ தனது முளையை உபயோகித்தோ ஒரு பண்டத்தைப் படைக்கிறான். பண்டம் என்பது […]

இயக்கவியலே மார்க்ஸ் ஆய்வின் அடிப்படை

மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 11 (முந்தைய பகுதி: 10 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) (படம்: இயந்திர உற்பத்தி மனித உழைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குகிறது) ஒரு பண்டத்தின் மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அதில் அடங்கியுள்ள சமூகவழியில் அவசியமான மனித உழைப்பே என்பது மார்க்சின் பதில். “எந்தப் பண்டத்தினது மதிப்பினது பருமனையும நிர்ணயிப்பது சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவே, […]

பண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (2)

தடையில்லா வாணிபக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரே பொருளுக்கு அரசுக்கு பலமுறை வரிசெலுத்துவது தவறு என்ற வாதத்தை முன்வைப்பவர்கள் அது முதலாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களுக்கும் பொருத்த வேண்டும் என்கிறார்களா?

மௌனம் களைந்திடுவோம்

    இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதத்திலி ருந்து 49 சதமாக உயர்த்துவதற்கான மசோதாவை மோடி தலைமை யிலான அரசு மக்களவையில் முதலில் நிறைவேற்றியது. ஆனால், அதற்கும் முன்னால் அவசரச் சட்டமாகக் கொண்டு வந்து ஒபாமாவின் இந்திய விஜயத்தின் போது அவரது காலடியில் இந்தப் பரிசை வைத்து வணங்கியது. மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில் இரு அவைகளின் இணைந்த அமர்வில் நிறைவேற்றி பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க மோடி […]