தலித்தாக பிறப்பது குற்றமா?

தலித்தாக பிறப்பது ஒரு போதும் குற்றமில்லை என்று நீங்களும், நானும் கூறினாலும் ஏன் தலித்தாக பிறந்த ஒருவர் கூறினாலும் தலித்தாக பிறந்தது குற்றமென்றே அவ்வப்போது ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படுகின்ற (பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சன்டிகரில் நடத்தப்பட்ட வன்கொடுமைகள், மரக்காணம் வன்முறைச் சம்பவங்கள்) நேரடியாகவோ மறைமுகமாகவோ “தலித்தாக பிறந்தது குற்றமென்று” இச்சமுதாயத்திடம் கூறிக்கொண்டேயிருக்கிறது. அண்மையில் வாசித்த “ஜூதன் ஒரு தலித்தின் வாழ்க்கை”(Joothan A Dalit’s Life), ஓம்பிரகாஷ் வால்மீகி அவர்களின் சுயசரிதை பற்றிய ஒரு சிறு பதிப்பே இக்கட்டுரை.

ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வாழ்வைச் சித்தரிக்கும் பாடல்கள்!

நூல் அறிமுகம் கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள் தி.நடராஜன் பாரதி புத்தகாலயம் பக்.352 ரூ.250 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எழுத இயக்கம் என்னைப் பணித்திருக்கும் சூழலில் இந்தப் புத்தகம் வருவது எனக்குப் பெரிய பொக்கிஷம் கிடைத்ததுபோல உணர்கிறேன். அதிலும் குறிப்பாக தஞ்சை மண்ணின் செங்கொடி இயக்க வரலாற்றில் கீழத்தஞ்சைக்கு ஆகப்பெரிய பங்கும் பாத்திரமும் உண்டு. இங்குதான் பண்ணைகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. சாட்டையடியும் சாணிப்பாலும் அந்த நாட்களின் அன்றாடமாக இருந்தது.

மோடி – ஆடுகளின் மீது அன்பைப் பொழியும் ஓநாய்!

தலித் ஆண்களை அர்ச்சகர்களாக்குவோம் என்ற மோடியின் அறிவிப்பு வரவேற்கத் தக்கதாக தோன்றினாலும், அது குஜராத்தில் கடுமையான தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் வால்மீகி சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் மோசடி தவிர வேறென்றும் இல்லை. தலித் மக்கள் வரலாற்று ரீதியாக சந்தித்து வரும் கொடுமைகள் குறித்து மோடி இதுவரை பேசியதேயில்லை என்று கூறலாம்.  ஆக,  இது தலைப்பு செய்திகளில் இடம்பெறும் உள்நோக்கம் கொண்ட  பச்சை இரட்டை வேடமன்றி வேறில்லை.

பால்தாக்கரேயும், மகாராஷ்டிர தலித்துகளும் – ஆனந்த் டெல்டும்டே

பால்தாக்கரேவின் மரணத்திற்கு பின்னான நிகழ்வுகள் பலரின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஊடகங்களில் சிலரால் எரிச்சலூட்டும் வகையில் அவர் மீதும், அவரின் பண்பின் மீதும் பொழியப்பட்ட புகழுரைகள் பொருத்தமற்றதாகவே இருந்தன.

‘இறந்தவர்களை பற்றி நல்லதை பேசு அல்லதை பேசாதே’ என்ற லத்தீன் பொன்பொழியின் பின்னே எல்லா நேரங்களில் ஒளிந்து கொள்வது அரசியல் நாகரிகம்

சாம்பலாய் போன சரித்திர சினிமா . . .

தமிழ் சினிமாவிற்கென்று ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. சினிமா ஒரு வலிமையான ஊடகம், இன்றைய தமிழ் மக்களின் முக்கிய பொழுது போக்குகளில் ஒன்று, ரசிகர்களுக்கு உயிர். ஒரு குறிப்பிட்ட படத்தை பார்த்துதான் இத்தனை கொலைகளை செய்தேன் என்று சொல்லி நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்த ஆட்டோ சங்கர். எதிர்பார்த்து காத்திருந்த தலைவனின் படத்தை காண இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கோயம்புத்தூர் இளைஞன் விஷ்ணுகுமார் என சினிமாவையும் மக்களின் வாழ்க்கையையும் பிரித்து பார்க்க […]