”கீழவெண்மணியின் வாய்மொழி வரலாறு” – நேர்காணல்

“தென்பறை முதல் வெண்மணி வரை” என்னும் நூலின் ஆசிரியர் தோழர் அப்பணசாமியுடன் ஓர் நேர்காணல். பொதுவாக விவசாய இயக்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக அதில் நேரடியாக ஈடுபட்ட தலைவர்கள், தனிநபர்கள், கோட்பாடு சார்ந்தும்  அது இல்லாமலும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் ஓடுக்கப்பட்டோருக்கான இயக்கங்கள் நிறைய உருவாகி வந்திருக்கிற சூழலில் இடதுசாரிகளின் பங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு என்னவாக இருந்திருக்கிறது என கேள்விகள் வருகின்றன ஆனால் உள்ளபடியே பார்த்தால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் […]

ஏன் என்னை பாதித்தான் “மாவீரன் கிட்டு”?

விபரம் அறியாமல் கலவரம் செய்பவதாக குற்றம் சாட்டுபவர்களுக்கு கொஞ்சமேனும் நிஜங்கள் புரிய இம்மாதிரியான திரைப்படங்கள் ஆவணம் செய்யட்டும். சாதிக் கலவரக் கொலைகள் என கடந்து செல்லும் முன் சிந்தியுங்கள். கேடுகெட்ட சாதீய சமூகத்திற்குள் எதிர் கேள்வி எழுப்பிய ஒருவனின் குரல்வளை சகல ஆதரவோடு குற்ற உணர்ச்சியின்றி நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்பதை உணருங்கள்.

கொல்லப்பட்ட மனிதர்களும். . . . . அழுகிப் போன சமூக மனசாட்சியும் . . . . . !

  அக்டோபர் மாதத்தில் அந்த 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆயிரம் செய்திக் குவியலில் இந்த மரணங்கள் குறித்த செய்திகள் அடிஆழத்திற்கு சென்று விட்டது. நம் நினைவில் இருந்தும் அகன்றும், மறைந்தும் வருகிறது. அந்நியமாதலின் ஒரு பகுதியாக அச்செய்திகள் குடிமைச்சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக குறைவாகவே இருக்கிறது. அண்டை வீட்டாருக்கு இடையிலேயே ஒரு சீனப்பெருஞ்சுவர் வளர்ந்தோங்கி இருக்கையில், இந்த மரணங்கள் நம் இதயத்தின் ஒரு நரம்பைக் கூட தொட முடியாத ஒரு உலகத்தில் நாம் இருக்கிறோம். முதலாளித்துவ […]

ஆண்பால் பெண்பால் அன்பால்…

ஆணும் பெண்ணும் முரண்களால் பின்னப்பட்டவர்கள். மனித இயக்கத்தின் பெரிய சுவாரஸ்யமே அதுதான். ஒருவரை ஒருவர் நேசித்து மதித்துக் கொண்டாடித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்மத்தையும் வெறுப்பு உணர்வையும் பரவச் செய்யக் கூடாது.

ஸ்வாதி – ராம்குமார்: பொதுப்புத்திக்கு இரைபோடும் ‘நீதி பரிபாலனம்’

முடியாட்சியின் போதே, அரசனைக் கேள்வி கேட்ட சிலப்பதிகாரக் கதையும் இங்கேதான் இருக்கிறது. பிரச்சனைகளின் மூலம் எது?, இயங்கியல் போக்கு எது? என்று பொது வெளியில் விவாதத்தை முன்னெடுப்பதும், மாற்று சிந்தனையினை வலுப்படுத்துவதும் காலத் தேவையாக இருக்கிறது.

கோவை கலவரம் உணர்த்தும் பாடம்…

கோவையில் இந்துமுன்னணி  செய்தித்தொடர்பாளர் சசி குமார் கொலையும், அதில் மதஉணர்வு கலந்து, கீழ்த்தரமான முறையில் அரசியல் லாபம் அடையும் நோக்கில், நடத்தப்பட்டுள்ள வெறியாட்டங்களும், சாதாரண  மக்களின்  மனதில்  கடும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. RSS துவங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, அந்த அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து  இதுபோன்ற  சீர்குலைவு வேலைகளை  ஓய்வில்லாமால்  செய்துவருகின்றன. இதற்காக  கொலை, கொள்ளைகள் முதல் சில்லறைத்தனமான அல்லது  கீழ்த்தரமான வஞ்சனைகள்  நிறைந்த  சூழ்ச்சிகளையோ  பிரச்சாரங்களையோ  கூடச் செய்யத் தயங்கியது இல்லை. […]

‘சலோ ஊனா’ நெடும்பயணம் வலியுறுத்தும் அரசியல் பாடம் . . .!

தலித் மக்களின் சுயமரியாதைக்கான மாபெரும் எழுச்சி போராட்ட பயணம் (சுயமரியாதை பயணம்) குஜராத்தில், அகமதாபாத்தில் ஆகஸ்ட் 5ம் நாள் தொடங்கி பல கிராமங்களை கடந்து கிட்டத்தட்ட 81கி.மீ தொலைவு பயணித்து இன்றைய நாளில் (ஆகஸ்டு 15, 2016) ஊனாவை  அடைகிறது. இது மதசார்பற்ற இந்திய நாடு, இந்து நாடு அல்ல என்று உணர்த்தும் வண்ணம் இந்திய கொடியை ஏற்றுகின்றனர். இதுகாறும் வன்கொடுமைகளுக்கும், இழிவாழ்விற்கும் ஆளான மக்கள் தன் விதியை தானே தீர்மானிக்க விடுதலை பாதையை நோக்கி வரலாற்று […]

சாலியமங்கலம் கூட்டு வன்புணர்வு, விழித்திடுமா சமூகத்தின் மனசாட்சி?

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், விளிம்பு நிலையில் வாழும் மனிதர்கள் மீதும் தாக்குதல்கள் ஏராளம் நடைபெற்று வருகின்றன. சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் ஆதிக்க சாதி வெறியர்கள் வன்செயல்களில் ஈடுபடுவதும், அந்த சம்பவம் நிகழும் போது மட்டும் கண்டன குரல் பல திசைகளிலிருந்து வருவதும்  நீடித்து தொடர்ச்சியாக இம்மக்களுக்காக பலரும் துணை நிற்பதில்லை எனும் நிலையும் இருக்கிறது. இது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவமாக பார்க்காமல், சமூக […]

தோல்வி கருத்தியலாகவே நிலைத்திருக்கப் போகிறதா பெண்ணியம்?

கொலைகளையும் பிணங்களையும் பார்த்து பார்த்து பழக்கப்பட்ட, மனித உரிமை மீறல்களோடு போராடும் கதிர் (Vincent Raj) கலைச்செல்வியை பார்த்தப் பின்னர் ’தன் அனுபவத்தில் இப்படியொரு கொடூரத்தைக் கண்டதில்லை’ என்கிறார். அந்த வரிகள் உண்டாக்கிய பதற்றம் அடங்கவே இல்லை. தலித் பெண்கள் இவ்வாறே கொடூரமாக சிதைக்கப்பட்டு கேட்பாரற்று மறக்கப்படுகின்றனர். நிர்பயா, சுவாதி போன்ற ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்படும் போது அதை தனக்கு நடந்த கொடூரத்தைப் போல கொந்தளிப்பவர்கள் சுரேகா-பிரியங்கா, ஜிஷா, கலைச்செல்வி […]

காவிக் கூட்டமே தலித்கள் மீது மட்டும் ஏன் இந்த குறி?

நம் நாட்டில் இன்று ஒரு சில சமூகத்தை மட்டும் அடக்க நினைக்கும் மதவெறிக் கும்பலை நாம் கண்டுகொள்ளாவிட்டால் அந்தச் சமூகம் மிகவும் மோசமான ஒருநிலைக்கு தள்ளப்படும், மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் படும் துயரத்தை நாம் ஒன்று சேர்ந்து தட்டிக் கேட்க வேண்டாமா ? இன்று பெரும்பாலும் அனைத்து ஊடகங்களால் மறைக்கப்படும் செய்திகள் இவை என்றால் தலித் மற்றும் சிறுபான்மையினர்கள் மீது தாக்கப்படும் தாக்குதலும் வன்முறையும்தான். தலித் சமுகம் ஒரு நலிவடைந்த சமூகம் முன்னுக்கு வரவேண்டும் என்றால் அரசுதான் […]