கொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . ?

கௌரவக்கொலை, ஆணவக்கொலை என்ற வார்த்தைகள் சர்வதேச அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக விவாதப் பொருளில் ஒன்றாக மாறியுள்ளது. கௌரவக் கொலைகள் கலாச்சாரத்தையும் மற்றும் பொருளாதார காரணங்களை கொண்டும் உலகம் முழுவதும் நடைந்தேறி வருகிறது. ஆனால் இந்தியாவில் சாதிய அடிப்படையில் நடைபெறுகிறது. சாதிக்குள் கலாச்சார காரணங்கள் பொருளாதாரக் காரணங்களும் உள்ளடங்கியுள்ளது. தடுப்பதற்கான மாற்று தீர்வை நோக்கி நகர்வதில் பெரும் பின்னடைவே காணப்படுகிறது. ஆதரவும் எதிர்ப்பும்: ஒரு குடும்பத்தின் கௌரவம் அல்லது மானம் இழக்கும் வகையில் அந்த குடும்பத்தின் பெண் […]

ஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . !

எந்தக்கொலைகளையும் நியாயப்படுத்திவிட முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் சரி. கொலைக்குற்றத்திற்கான இந்திய தண்டனை சட்டம் எல்லோரும் ஒன்றாகத்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. நல்லவேளை அதுமட்டும் சாதிக்கொரு நீதியாய் இல்லாமல் போனது. ஆனால் ஏட்டில் அப்படி இருந்தாலும் நடைமுறையில் அப்படியில்லை என்பது உண்மை. சாதி பார்த்துத்தான் காவல் நிலையங்களில் வழக்கே பதியப்படுகிறது. அநேகமான வழக்குகள் பதியப்படாமலேயே கட்டப்பஞ்சாயத்தில் முடித்துவைக்கப்படுகிறது. ஆதிக்கசாதியினர் மீதான தலித்துகளின் அத்தனை வழக்குகளும் சம்பவத்தை கேள்விப்பட்டவுடனே பதியப்பட்டதல்ல. குறிப்பிட்ட அக்கொலைக்குற்றம் விஸ்வரூபம் […]

பால்புதுமையினருக்கான சமூகநீதி . . . . . . . . . . . . . . !

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானதைத்  தொடர்ந்து  ராஜாஜி ஹாலில் பெரும்திரளான திருநங்கைகள் அவருக்கு அஞ்சலி செலுத்தியதையும், காவேரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதியின் இல்லத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டபோது அந்த ஊர்வலத்தில் திருநங்கைகள் கலந்துகொண்டதையும் காணமுடிந்தது. தங்களுக்கு கவுரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதில் கலைஞர் முனைப்போடு செயல்பட்டார் எனத் திருநங்கைகள் நன்றி தெரிவித்த பேட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. முன்னெந்த அரசியல்தலைவருக்கும் இல்லாத அளவில் “கலைஞருக்கு திருநங்கைகள் நன்றி” எனத்தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. அது உண்மையும் கூட. […]

இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்?????

இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை என்னால் உணரமுடியாது என்பது நித்ரசனமான உண்மை… –அமீர். உங்கள மாதிரி சமூகத்தை மேம்போக்கா பாத்துட்டு நாலுவார்த்த புரட்சிகரமா பேசிட்டு போறவங்களுக்கு சாதிய பத்தி தெரியாம இருக்க இஸ்லாமிய குடும்பத்துல பொறக்கணும்னு அவசியம் இல்ல. ஒரு சைவ, வைணவ குடும்பத்துல பொறந்தாலே போதும். ஏன்னா இந்தியாவப் பொறுத்தவரை சாதி தான் முதல், அப்புறம்தான் மதம். So ஒருத்தரோட மதம் மட்டும் சாதி குறித்த சரியான பார்வையை கொடுத்துவிடாது. உங்களுக்கு தெரியலையா? இல்ல உங்க […]

தலித் அர்ச்சகர்: இந்து ஆகமத்திற்கு முன் கைகட்டி நிற்கிறதா இந்திய சட்டம்?

கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக அரசாங்கம் நாளொரு அறிவிப்பு செய்து இந்திய தேசியத்தையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி சமீபமாக அறிவித்த அறிவிப்புகள் எல்லாமே செம ஹாட் அறிவிப்புகள் தான். அதில் ஒன்று தான், 6 தலித்துகள் உள்பட பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்த அறிவிப்பு. கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. திருவாங்கூர் தேவசம் போர்டு என்பது கேரள அரசின் தேவசம் போர்டு என்று அறியமுடிகிறது. அந்த […]

கௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி

கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்

சேரிகள் என்றால் அத்தனை கேவலமா?

சேரிகள் அசுத்தமானவை. அவை வெளிச்சமற்ற, அடிப்படை வசதிகள், வாழத்தகுதியற்ற பல இன்னல்கள் கொண்ட பகுதிகள். வரலாற்றில் சேரி என்றால் மக்கள் கூடிவாழும் என்ற பெயரும் இருக்கிறது. உலகெங்கிலும் சேரிகள் இருந்தாலும், தமிழகத்தில் மட்டுமே பட்டியலின மக்கள் வாழும் பகுதியாக அது அடையாளம் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வாழ்பவர்கள் எல்லாம் திருடர்கள், கொலைகாரர்கள், மோசமானவர்கள் என காலம்காலமாக சினிமாக்களின் வழியாக சித்தரித்து வருவது மட்டுமல்லாமல், எல்லா காலகட்டத்திலும் சேரியைச் சேர்ந்தவர்கள் என்றால் இழிவானவர்கள் என்ற பரப்புரையை பொதுவெளிகளில் தெள்ளத் […]

சாதியாதிக்க அரசியலும் தொட்டியபட்டி வன்முறையும் – ஒரு கள ஆய்வு . . . . . . !

2017, மார்ச் 30 , மாலை 6 மணி அளவில், ராஜபாளையம் பக்கத்தில் உள்ள தொட்டியபட்டி கிராமத்தில், அருந்ததியர் காலனி  வீடுகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டன. தமிழக வரலாற்றில் இன்னொரு கருப்பு நாள். ஏப்ரல் 1 அன்று நாங்கள் அங்கு சென்று அறிந்த சம்பவத்தின் பின்னணி, “”தொட்டியபட்டி கிராமம், கொத்தங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது. தனித்தொகுதி. தொட்டியபட்டியில் ஏறக்குறைய 400 குடும்பங்கள் கம்பளத்து நாயுடு சாதியினர். 50 குடும்பங்கள் அருந்ததியினர். கடந்த 30.03.2017 அன்று,  அருந்ததியினர் காலனி குடியிருப்பில் உள்ள […]

நந்தினியின் பிணத்தையும் வன்புணரும் சாதிய ஆணாதிக்க இழிமனோபாவம் . . . . . . !

சில விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் மனதில் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுக்கும். சிலவற்றில் கட்டுக்கடங்கா துயரம் உருவாகும். எழுத நினைத்த     போதே மனம் நடுங்கச் செய்த இந்த விஷயம் கொடும் துயர் தந்ததுடன், ரௌத்திரம்    பழக வேண்டிய தேவையையும் உணர்த்தியது.             உலகமே வியந்து நின்ற தமிழக மக்களின் எழுச்சி ஜல்லிகட்டில் நிலைத்திருந்த போது தமிழன் தன்னைத் தானே நினைத்து வெட்கித் தலைகுனிய வைத்துள்ள சம்பவம். இந்தியத் தலைநகரை குலுங்க வைத்த நிர்பயாவை பின்னுக்குத் தள்ளி நிறுத்திய  கொடூர […]

“சாதி தேசத்தின் சாம்பல் பறவை” – நம் சமகால சமூக வரலாற்று ஆவணம்.

இந்தியப்பண்பாடு – கலாச்சாரம் – நாகரிகம் தொடர்பாய் ஆயிரம் நல்ல சங்கதிகள் சொல்லமுடிந்தாலும் இந்த மண்ணின் ஒற்றைக் கொடுமையானது அவற்றையெல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்ய முடிகிறது என்றால் அதன் பெயர், “சாதி”. உலக அளவில் சாதியை விட வீரியமும், விசமும் கொண்ட இன்னொரு சமூகக் கொடுமை இருக்கிறதா என்றால் சந்தேகமே. இந்த சாதிக்கொடுமை குறித்து- அதைக் களைந்தெடுத்து மானுடம் பேணுவது குறித்து ஒட்டுமொத்த சமூகமும் கள்ளமௌனம் சாதிப்பதையே இங்கே காண முடிகிறது. குடும்பம், நட்பு, பொதுவெளி, கல்விக்கூடம், […]