ஆயிஷா நடராஜனுக்கு சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது!

2014ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

வனாந்திரங்களில் அலைவுறும் கரும்பலகை மனிதர்கள்!

எஸ்.கருணா மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வந்த நாளிலிருந்தே மனம் அமைதிகொள்ளாமல் தவிக்கிறது எனக்கு. ஏதோ ஒரு குற்றஉணர்வு பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு எங்கள் திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டும் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் கடைசி இடத்தையே பிடித்திருப்பதுதான் காரணம். இயல்பிலேயே எங்கள் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம்தான். தொழில்வளம் என பெரிதாக எதுவும் இல்லை. முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியிருக்கிற பெரும் நிலப்பரப்பு தான் எங்களுக்கு சொந்தம். அரசுகளின் “வளர்ச்சி” கொள்கைகளினால் […]

அசைவை ஏற்படுத்தாத அரசாணை எண்:92

தனியார்மய பொருளாதார கொள்கையின் விளைவாய் கல்வி பிரி.கே.ஜி துவங்கி பி.எச்.டி. வரை கடைவிரிக்கப்பட்டு பல இலட்சங்கள் விலை பேசபடுவதை நடைமுறையில் அறிகிறோம். சாதாரண ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியை கைவிடுவதற்கு கடந்த 1960-70 களில் கூறிய கருத்துக்களை இப்போது வேற மாதரி கூற வேண்டியிருக்கிறது. அப்போது எந்த விதமான வசதி வாய்ப்புகளும் இன்றி, குறிப்பிட்ட தூரங்களில் கல்வி நிலையம் இல்லாமல், கல்வியறிவின் முக்கியத்துவம் தெரியாமல் சாதாரண குழந்தைகள் தங்கள் கல்வியை கைவிட்டனர். இன்றைக்கு நிலை […]

விஞ்ஞானிகளான குழந்தைத் தொழிலாளிகள்: சுடர்விடும் அறிவொளி!

“ஆற்றல்” என்றால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள், அணு, மின்சாரம் என இயற்கையில் கிடைக்கும் சக்திகள் தான். உலகம் இன்று ஆற்றல் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு, ஆற்றல் தொடர்பான ஆய்வுத் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்றலை பயன்படுத்துவது, பாதுகாப்பது, புதிதாகக் கண்டறிவது உள்ளிட்ட பொருளில் மாணவர்கள் ஆய்வைச் சமர்ப்பிக்கலாம் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களும் விதவிதமான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை […]

அரசுப் பள்ளிகள் என்றொரு அடையாளம்!

கல்வியை தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட மத்திய – மாநில அரசுகள் அரசு கல்வி நிறுவனங்களை எட்டி பார்க்க அஞ்சுகின்றன. ”தேசத்தின் எதிர்காலம், வகுப்பறையில் நிர்மாணிக்கப்படுகிறது” என்கிற மகாத்மா காந்தியின் வார்த்தைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அறிவியல் பூர்வமான, வாழ்க்கைக்கான கல்வியை பெறும் சமூகமாக உருவாக்காமல் பணம் பண்ணும் எந்திரங்களாக மாணவர்களை மாற்றுகிற கல்விக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில்1960ல் காமராஜர் துவக்கிய இலவசக்கல்வி, மதிய […]

குட்டிக் குழந்தைகளின் வகுப்புத் தோழன்!

தற்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி, எனது வகுப்புத் தோழி என்றால், யாரேனும் ஒப்புக் கொள்வீர்களா? புத்தகக் கடை வைத்திருக்கும் எனது நண்பர் வெங்கடேசனுடைய செல்ல மகள் கோகுலவாணியின் பிறந்தநாள் ஏப்ரல் 23 என்று அறிந்ததும், ஆஹா! உலகப் புத்தக தினத்தன்று பிறந்திருக்கிறாள் என்று உற்சாகம். இரண்டு, மூன்று வயதாகும்போதே கடைக்கு அழைத்துவரப்படும் ஒவ்வொரு முறையும் அவளோடு கொஞ்சம் நேரம் செலவிடுவது, பேச்சுக் கொடுப்பது, விளையாடுவது என்றாகியது.

கழுத்தை நெரிக்காத கல்வி முறைகள்

”இங்குள்ள மக்கள் தங்களது பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மொழியின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாய் இருக்கிறார்கள்.இவர்களை ஆள்வதற்கு முதலில் அவர்களது மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் இருந்து அவர்களைப் பிரிக்க வேண்டும்” இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியயை நிலை நிறுத்த அனுப்பப்பட்ட மெக்காலே பிரபு விக்டோரியா மகாராணிக்கு 1835 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சாரம்.

அப்படித்தானோ?

இன்று வழக்கம் போல சமயபுரம் தோல் ப்ளாசாவில் இறங்கி பள்ளிக்கு நடந்து கொண்டிருக்கிறேன்.ஒரு பத்து அல்லது இருபது தப்படிதான் போயிருப்பேன். மின்னலென ஒரு பெண் மொபெடில் என்னை முந்திச் சென்று மறித்து நின்றாள்.ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்தக் குழந்தை.“ஏய் வாய், எப்படி இருக்க?”

ஜெயமோகன்: தமிழை பாதுகாக்க புறப்பட்டிருக்கும் கோமாளி அவதாரம்

கடந்த மூன்று தினங்களாக தமிழ் இந்து நாளிதழ் எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரையும், அதற்கான கடுமையான எதிர்வினையும் நிறைய பக்கங்களை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமேதாவிதனத்தின் உச்சியில் எப்போதும் நிற்கும் ஜெ.மோ போகிற போக்கில் தமிழை அதன் எழுத்து வடிவை எப்படியும் பாதுகாத்தே தீரவேண்டும் என்று ”வெறி” கொண்டு எழுதி இருக்கும் கட்டுரைக்கான எதிர்வினைகள்தான் அவை. தமிழகத்தின் சிறந்த சிந்தனையாளர்கள், கல்வியாளர்களின் எதிர் கருத்துக்களை முதலில் பார்த்துவிடலாம்.

6B னா சும்மாவா

மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். “AHM சாரப் பார்க்கனும்.” அன்பழகன் கை நீட்டிச் சுட்டவே என்னிடம் வந்தாள் அந்தக் குட்டி தேவதை.   “ என்னை ஏன் சார் கீழ உட்கார வச்சீங்க. பெஞ்ச் ல உக்கார வையுங்க சார்”   ஒன்றும் புரியாது போகவே திரு திருவென முழித்தேன்.