யமஹா தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் . . . . . . . . !

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி ஒன்று, இந்தியாவில் உள்ள ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் 56 ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிபோக இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டது. இந்த எண்ணிக்கை வெறும் தொடக்கம் மட்டுமே.. அடுத்த மூன்று ஆண்டுகளில் இது 3 லட்சத்தைத் தாண்டும் என ஐடி தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விரக்தியுடன் தெரிவித்திருந்தனர். அதை உறுதிசெய்யும் விதமாக, அதற்கடுத்த ஆண்டே சென்னை கிண்டியில் உள்ள வெரிசான் நிறுவனம், அதில் பணிபுரியும் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் […]

உயர்கல்வி நிறுவனங்கள் மீதான தொடர் தாக்குதல்களை தொடுத்து வரும் பி.ஜெ.பி அரசு . . . . . . . . . . . . . !

இந்தியாவில் செயல்பட்டு வரும் சுமார் 800 பல்கலைகழகங்களையும், 40,000 கல்லூரிகளையும் வழிகாட்டும் அமைப்பாக பல்கலைகழக மானிய குழு (UGC) கடந்த 62 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் செயல்பாடுகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பினும், அரசின் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. 2014-ம் ஆண்டு பதவியேற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வழிகாட்டும், மோடி தலைமையிலான பி.ஜெ.பி அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மீது தொடர் தாக்குதல்களை தொடுத்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் […]

பால்புதுமையினருக்கான சமூகநீதி . . . . . . . . . . . . . . !

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானதைத்  தொடர்ந்து  ராஜாஜி ஹாலில் பெரும்திரளான திருநங்கைகள் அவருக்கு அஞ்சலி செலுத்தியதையும், காவேரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதியின் இல்லத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டபோது அந்த ஊர்வலத்தில் திருநங்கைகள் கலந்துகொண்டதையும் காணமுடிந்தது. தங்களுக்கு கவுரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதில் கலைஞர் முனைப்போடு செயல்பட்டார் எனத் திருநங்கைகள் நன்றி தெரிவித்த பேட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. முன்னெந்த அரசியல்தலைவருக்கும் இல்லாத அளவில் “கலைஞருக்கு திருநங்கைகள் நன்றி” எனத்தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. அது உண்மையும் கூட. […]

சாதி உணவான சத்துணவு . . . . . . . . !

வெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பாப்பாள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல்காரர் பாப்பாள். தலித் பெண் சமைக்கின்ற உணவினை எங்களது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பெண் சமைக்கக்கூடாது. பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கூட வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே வந்து தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர் சாதி வெறியர்கள். எட்டு வழி சாலை கூடாது என்று போராடுபவர்களை தேசிய பாதுகாப்பு […]

ஜனநாயகத்தின் வழி அன்பெனும் மரம் வளர்ப்போம். . . . . . . . . . !

ஒன்றாம் வகுப்பு சிறுவன் மற்றும் நான்காம் வகுப்பு சிறுமியிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இருவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் என சில பெயரைக் குறிப்பிட்டனர். அதற்கான காரணங்கள் அல்ல…  ஒரே காரணம்! அந்த ஆசிரியர்கள் யாரையும் திட்டவோ,  அடிக்கவோ, தண்டனை தரவோ மாட்டார்கள் என்பதே! இவர்களைப் போன்ற பிஞ்சு மனங்களை புரிந்து அவர்களை வசப்படுத்துவது பற்றிய நோக்குடனே ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் கல்வி செல்லும் திசைவழி குறித்தும் நீண்ட காலமாக பலவகை பேச்சுகளும் இருந்து வருகின்றன. […]

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 4

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத மொத்தம் 13,26,725 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 12,69,922 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 7,14,562 பேர் தகுதி பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தெலுங்கானா மாணவர் ரோகன் புரோஹித் 690 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், டெல்லி மாணவர் `ஹிமான்ஷூ சர்மா 690 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும், டெல்லி மாணவர் ஆரோஷ் தமிஜா 686 மதிப் பெண் பெற்று […]

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 3

அதே நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது? 1952-ல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது மாநில அரசுக்கான அதிகாரங்கள் பட்டியல் 11-ல் மருத்துவம் உள்ளிட்ட உயர்படிப்புகள், பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருந்தன. 1976-ல் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைச் சரிசெய்வதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. 1976 டிசம்பர் 18 -ல் கொண்டு வரப்பட்ட அந்த 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம் மாநில அரசுக்கான அதிகாரங்கள் சிலவற்றை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. அப்போதுதான் […]

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 2

உலக நாடுகள் எங்கேயும் இல்லாத வகையில் 150 பேருக்கு ஒரு மருத்துவரை உற்பத்தி செய்துள்ள அந்த நாடு கியூபா. “அனைவருக்கும் சுகாதாரச் சேவை என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கியூபாவைப் போன்று வேறு எந்த நாடும் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படவில்லை,” என்று உலகச் சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ஹாஃப்டன் மாலர் கூறியிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கூற்றை நிரூபிப்பது போல் கியூபாவின் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது. மக்களின் […]

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 1.

இந்திய நாடு அந்நிய ஏகாதிபத்தியத்திடமிருந்து 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் அரசியல் விடுதலை பெற்று, 70ஆண்டுகள் முடிந்து 71-ஆவது ஆண்டு கடந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரம் ஏற்றத் தாழ்வுகள் மிக்க, பல்வேறு நாடுகளின் குடிமக்களாயிருந்தவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு தேச மக்களானார்கள். அவர்களுக்கென ஓர் அரசியல் சட்டம் வந்தது. அது ஜனநாயக உரிமைகள் சிலவற்றைக் கொண்டு வந்தது. மன்னர்கள் இந்திய நிலப்பரப்பை ஆட்சி செய்வதிலிருந்து ஒழிந்தார்கள். ஆனால் மன்னராட்சிக்கால விழுமியங்கள் இன்றும் தொடர்கின்றன. பல நூறு ஆண்டுகால […]

இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்?????

இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை என்னால் உணரமுடியாது என்பது நித்ரசனமான உண்மை… –அமீர். உங்கள மாதிரி சமூகத்தை மேம்போக்கா பாத்துட்டு நாலுவார்த்த புரட்சிகரமா பேசிட்டு போறவங்களுக்கு சாதிய பத்தி தெரியாம இருக்க இஸ்லாமிய குடும்பத்துல பொறக்கணும்னு அவசியம் இல்ல. ஒரு சைவ, வைணவ குடும்பத்துல பொறந்தாலே போதும். ஏன்னா இந்தியாவப் பொறுத்தவரை சாதி தான் முதல், அப்புறம்தான் மதம். So ஒருத்தரோட மதம் மட்டும் சாதி குறித்த சரியான பார்வையை கொடுத்துவிடாது. உங்களுக்கு தெரியலையா? இல்ல உங்க […]