பயமறியா செங்கொடிக் காதலர்களடா நாங்கள்…

நீங்கள் மாணவர்கள்தானே கொஞ்சம் உலக வரலாற்றைப் புரட்டி பாருங்கள், நாங்கள் செங்கொடிக் காதலர்கள். மறந்துவிடாதீர்கள்.

திட்டமிட்ட இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி | IAS அதிகாரியின் சாட்சியம்

திட்டமிட்ட இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி. குஜராத் குருதி! குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..! ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட  குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஷ் மந்தேர்யுடைய குருதி படிந்த  கட்டுரை இது. மீண்டும் இதுபோன்றதொரு கலவரத்திற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மோடி அரசின் இந்துத்வா […]

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு – தேசவிரோதிகள்

பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு […]

65 ஆண்டுகளுக்குப் பின் ஹிரோஷிமா – டெட்ராய்ட்

இரண்டு குண்டுகள் வெடித்து 65 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிரோஷிமா மற்றும் டெட்ராய்ட். அங்கு என்னதான் நடந்தது? நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான்… 1945 ஆகஸ்டு மாதத்தில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் இரண்டு அணுகுண்டுகள் வெடித்து, இரு நகரங்களும் நாசமாகிப் போனது. 1. 1945 இல் – ஹிரோஷிமா (HIROSHIMA) 65 ஆண்டுகளுக்குப் பிறகு – ஹிரோஷிமா (HIROSHIMA) 2. ஹிரோஷிமா நிகழ்வின் 65 ஆண்டுகளுக்குப் பின்  – டெட்ராய்ட் (DETROIT) இந்த இரண்டின் மீதும் நீண்ட காலத்திற்கான பேரழிவை […]

வேண்டாம் தனுஷ்…

எவ்வளவு அமைதியாகப் பார்த்தாலும், கடுப்புதான் வருகிறது? மாரி படம்தான். படம் எடுத்த விதமோ, தனுஷ் நடிப்போ இங்கு பிரச்சனை இல்லை. ஆனால் படத்தின் மூலம் ஏற்படும் மாற்றம்தான் இங்கு பிரச்சனை. ஒரு சில நபர்களின் படங்களுக்கு மட்டும் விளம்பரம் செய்யப்படும் விதங்களும், மீடியா சப்போர்ட், தியேட்டர் என்ற எல்லாமும் கிடைத்துவிடுகிறது. அதேபோல் மாரி படத்திற்கும் மேலே சொன்ன அனைத்தும் எளிதில் கிடைத்துவிட்டது. அமர்க்கள விளம்பரங்கள், பாடல்களைக் கேட்டு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து திரும்பி வரும் ரசிகனுக்கு […]

விக்கி மாரத்தான் 2015

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிபீடியா பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம். நோக்கம் பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும். நேரம், தேதி சூலை 19 (ஞாயிற்றுக் கிழமை), 2015 அன்று 24 மணி நேரமும் (அவரவர் நேரத்திற்கு ஏற்ப). […]

இணைய முகவரிகளை தமிழில் பகிர்வது எப்படி?

நாம் ஒரு கட்டுரை அல்லது ஒரு தளத்தின் பக்கத்தின் லிங்க் (link) ஐ காப்பி செய்து சமூக வலைத்தளங்களில் பகிரும்போது ஒரு சிக்கலை அனைவரும் எதிர் கொண்டிருப்போம். அது யுஆர்எல் (URL) என்கோடிங் (Encoding) பிரச்சனைதான். கணினியின் கீ போர்டில் தமிழில் தட்டச்சு செய்யும் போது அதிலுள்ள தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாகக் கணினி எடுத்துக் கொள்ளும். தமிழில் நாம் தட்டச்சு செய்யும் எழுத்துக்கள் ஆங்கிலமாக இல்லாத காரணத்தினால், தமிழ் எழுத்துக்களுக்கு நிகரான ஆங்கில மொழி எழுத்துக்களாக மாற்றப்படுகின்றன. […]

கையேந்தினால் போதுமா? கழிப்பறை எப்போது?

ஆறாம் வகுப்பு முதல் பள்ளிகளில் மாணவிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. வயதிற்கு வந்த பிறகு, பெண்களை பள்ளிக்கு அனுப்புறதே பெரிய விஷயம். இதுல கழிப்பறை இல்லாதபோது அவர்களின் கல்வி தொடருமா?