ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை & பால் ஆகியவை வதந்திகளே . . . . . . . !

ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை, பால் ஆகியவை வதந்திகளே என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக கேள்விக்குறியுடனான தலைப்பை போடுவதும் கூட அவசியமில்லாமல் ஒரு வதந்தியை உயிரோடு வைத்திருக்கும். ப்ளாஸ்டிக் அரிசி, ப்ளாஸ்டிக் முட்டை, ப்ளாஸ்டிக் பால் என்று பலவிதமான வதந்திகள் நம்மை ஆட்கொள்கின்றன. உண்மைதானா? நாம் உணவை வாங்கிவருகின்ற ப்ளாஸ்டிக் கவரைப் போன்றதுதானா நாம் சாப்பிடும் உணவும்? … பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கும் இந்த செய்தி உத்திரபிரதேச ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டு இன்று நாடு முழுவதும் பரபரப்பாகியுள்ளன. […]

இதோ அந்த ரோஜா … இப்போது நடனமிடு!

மார்க்சியம் மார்க்சுடன் தொடங்குகிறது, ஆனால் அவருடன் முடிந்துவிடுவதில்லை – என அறுதியிட்டுக் கூறும் இந்தப் புத்தகம். மார்க்சியத்தின் நவீன கால வளர்ச்சி வரையிலும் – பருந்துப் பார்வையில் விளக்குகிறது. குறிப்பாக, சமூக மாற்றம் என்பது நடந்தே தீரவேண்டிய ‘சாசுவதம்’ என்ற நம்பிக்கையை மறுதலித்து, ஒவ்வொரு புதிய நிலைமைகளுக்கும் ஏற்ப, மார்க்சியத்தை மேம்படுத்தி, புதிய சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற ‘கட்டளையை’ நமக்கு விதிக்கிறது.

ஜே.என்.யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்த விசாரணை !

சமூக நீதியை நிலைநாட்டும் அரசியல் இயக்கங்களும், சாதி எதிர்ப்பு போராட்டங்களும், கல்வி வேலைவாய்ப்பின் ஒவ்வொரு நிலையிலும் ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிரான போராட்டங்களும் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும். நாம், அத்தகைய இயக்கங்களை உரமூட்டி வளர்க்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். சிவப்பும் – நீலமும் – கருப்பும் சிந்தனையில் ஏந்திய இதயங்கள் இணைய வேண்டும்.

கொடூரமாக கொல்லப்பட்ட 3 பெண்ணுடல்கள் !

பாலியல் கல்வி வேண்டும் என்பது ஒரு தீர்வு. பெண்ணின் உடல் பற்றிய நியாயமான புரிதல் வேண்டும். ஒவ்வொரு குடும்பமுமே இவ்விசயத்தில் சரியாக புரிந்து செயல்பட வேண்டும். ஆணாதிக்கமும், சாதியும் கொண்ட நமது சமூகம் – குடும்ப அமைப்பை அப்படி உருவாக்கவில்லை.

NGO மனநிலையிலிருந்து வெளிவர, 100 முறை கக்கூஸ் பாருங்கள் …

‘நமது கழிவுகளை நாமே அகற்றலாம்’, ‘நாமாவது சுத்தமாக இருப்போம்’, ‘பணம் கொடுத்து உதவலாம்’, ‘அந்த மக்களை மீட்கலாம்’ என்றெல்லாம் தோன்றினால் – அந்தப் படத்தை இன்னொரு முறை பாருங்கள். நிச்சயம் அவற்றாலெல்லாம் இப்பிரச்சனைக்கு முடிவுகட்டிவிட முடியாது.

பொய்மையின் குருக்கள் ஒரு எச்சரிக்கை !

    ’ஜல்லிக்கட்டு’ பண்பாட்டுத் தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்றுவந்த போராட்டம், காவல்துறை வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இத்தகைய அடக்குமுறைகள் புதியவை அல்லவென்றாலும், இந்தமுறை மக்கள் கண்முன் பட்டவர்த்தனமாக நிகழ்த்தப்பட்டது. ஏன் ஜல்லிக்கட்டு? தமிழக நலன்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை நம்மால் வரிசைப்படுத்த முடியும். காவிரி நீர் உரிமைக்கான போராட்டத்தை டெல்டா விவசாயிகள் நடத்தினார்கள். அது விவசாயிகள் அமைப்புகளின் ஒன்றுபட்ட போராட்டமாகவும், அனைத்துக் கட்சிகளின் போராட்டமாகவும் மாறியது. மாநிலம் தழுவிய கடையடைப்பு நடந்தபோது, சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளும் வலுவான […]

ஒன்னும் பேசாதவங்க ஊர்ல உளறுவாயன் ராசா . . . . . !

முன்னுக்கு வருகிற பிரச்னைகள் மீது எல்லோரும் ஆளாளுக்கு ஏதாவது சொன்னது போக அறுதியான உண்மை என்கிற ஒன்று இருக்குமல்லவா, அதை நான்தான் சொல்லப்போகிறேன் என்பது போல எழுதுவது ஜெயமோகனின் வாடிக்கை. விட்டுப்போன மிச்சம் மீதிகளை கலந்துக்கட்டி ஏதாவது சொல்வதற்கு சால்ஜாப்பாக ‘உடனடியாய் கருத்து சொல்வதில் எப்போதும் தயங்குகிறவன்’ என்று மிகுந்த அடக்கத்தோடு தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளவும் தயங்கமாட்டார். உடனே, முன்னணி எழுத்தாளர்களெல்லாம் மூடிக்கொண்டிருக்கும் போது (வாயைத்தான்) இவராவது வாய் திறந்து அருளியிருக்கிறார் பார்த்தீர்களா என்று சிலர் குதியாளம் போடுவார்கள். […]

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதிக்கு அஞ்சலி நிகழ்ச்சி …

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஐடி இளைஞர்கள் முன் நின்று ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்விற்காக. ஸ்வாதியின் குடும்பத்தாரும் வந்திருந்தனர். நானறிந்த சிலரும், நான் அறியாத பலரும் வந்திருந்தனர். மிஞ்சிப்போனால் 100 பேர் இருக்கும்.

#ஸ்வாதி – கொலை, வெறுப்பை எப்படி வீழ்த்துவது?

இந்த வெறுப்பை வீழ்த்தாமல்… கொலைகளை எப்படி வீழ்த்துவோம்? வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே?

பேஸ்புக் – இணையத்தை இலவசமாக்குமா?

எல்லோருக்கும் இணையதள இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்குவது சாத்தியமே. அதற்கான திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. அதற்கான நிதியைக் கொண்டு 2 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களை ‘பைபர் ஆப்டிகல் கேபில்’ மூலம் இணைக்க கடந்த யுபிஏ அரசு முடிவு செய்தது.