சேர்ந்து சிந்திக்க ஓர் நொடி – ஆர்.செம்மலர்

அனைத்து நிர்வாக மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள் பாஸிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் சூழலில் ஜனநாயகம் காக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்பும் அனைவரும் ஜனநாயக வழிமுறையை விஸ்தரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் வலுவான போராட்டங்களை வழிநடத்தி கோரிக்கைகளை வென்றெடுப்பதும் மாற்றத்திற்கான பயணத்திற்கு வலு சேர்ப்பதும் சாத்தியமாகும்.

நந்தினியின் பிணத்தையும் வன்புணரும் சாதிய ஆணாதிக்க இழிமனோபாவம் . . . . . . !

சில விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் மனதில் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுக்கும். சிலவற்றில் கட்டுக்கடங்கா துயரம் உருவாகும். எழுத நினைத்த     போதே மனம் நடுங்கச் செய்த இந்த விஷயம் கொடும் துயர் தந்ததுடன், ரௌத்திரம்    பழக வேண்டிய தேவையையும் உணர்த்தியது.             உலகமே வியந்து நின்ற தமிழக மக்களின் எழுச்சி ஜல்லிகட்டில் நிலைத்திருந்த போது தமிழன் தன்னைத் தானே நினைத்து வெட்கித் தலைகுனிய வைத்துள்ள சம்பவம். இந்தியத் தலைநகரை குலுங்க வைத்த நிர்பயாவை பின்னுக்குத் தள்ளி நிறுத்திய  கொடூர […]

செல்லாக்காசு . . . . . . . !

இந்த நாலு நாளா தூங்க முடியலை. மனசுல நிம்மதி இல்லை. எனக்கு மட்டும் இல்லை. அக்கம் பக்கத்துல இருக்கற என்னோட சிநேகிதகாரங்களும் நிம்மதியா இல்லை. ஒவ்வொரு தடவையும் வீட்டுல கரண்ட் கட்டாகறப்ப நம்ம வீட்ல மட்டுமா? ன்னு ஒரு கவலை வந்து, எல்லா வீட்டுக்கும் கட்டாகியிருக்குன்னு தெரிஞ்சா ஒரு நிம்மதி வருமே அது மாதிரி நிலைதான் இப்ப. ஆனா திரும்ப கரண்ட் வரல. நமக்கு மட்டும் கரண்ட் இல்லேன்னா, மனசு பதறுமே அது மாதிரி ‘எப்ப அமைதி […]

ஆட்டோகிராப் …..!

வீட்டிற்குள் நுழைந்தவள் முகம் கை கழுவிக் கொண்டு சமையலறையில் நுழையப் போனவளை ‘ லட்சுமி ‘ என்று அழைத்து அவளின் கையைப் பிடித்து டைனிங் டேபிளில் அமர வைத்து சூடான காப்பியை தந்தான். ” ஸாரி லட்சுமி உன்னோட வேலை சுமையை யோசிக்காமல் உன்னை டென்ஷன் பண்ணிட்டேன் ” என்றான்.

ஜாதியற்றவளின் குரல் – வாசிப்போம் விவாதிப்போம் …

பார்ப்பனராகவோ தலித்தாகவோ யாரும் கேட்டுப் பிறப்பதில்லை.பிறந்தபின் சமூகத்திற்கு ஆற்றும் கடமைகள்தான் ஒருவரை நேசிக்கவோ வெறுக்கவோ வைக்கின்றன.வெண்மணியின் கொடூரத்தைச் சந்தித்து சாதியாகவும் வர்க்கமாகவும் நின்று போராடிய தஞ்சை நாகை திருவாரூர் மாவட்ட தலித் விடுதலைப் போராட்ட அனுபவங்களையும் அசை போடுவோம்.

பாபநாசம் – கதையின் கருத்து சரியா?

பாபநாசம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும்

இளையராஜாவின் புதிய ரசிகை … (அனுபவப் பதிவு)

என் ஐம்பதை நெருங்கும் வயதில் வலைத்தளம் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள். அப்படியென்றால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இசைஞானியை அறியாமல் அவ்வளவு அறியாமை நிறைந்த மனுஷியா நான்! இல்லை! ஆமாம்! இரண்டுமே என் பதில்களாக உள்ளன.

21 ஆம் நூற்றாண்டிலும் மனுவின் ஏகப் பிரதிநிதியாக இருந்த தந்தையின் மரணம் …

என் தந்தை ரயில்வே துறையில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். ஆனாலும் இறுதிவரை சாதி ஆச்சாரங்களைக் காப்பதிலும் பெண்ணடிமைத்தனத்தை சரியாகப் பேணுவதிலும் ”சிறந்த குடும்பத் தலைவராக” இருந்தார். அவர் எந்த சாதி சங்கத்திலும் எப்போதும் சேர்ந்திருந்ததில்லை எனும் போதிலும், அவர் மறைவின் போது வந்திருந்த ஆண்களும் பெண்களும் என் தந்தையின் பெருமையாகக் கருதி சிலாகித்தது, அவர் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த ஆச்சாரத்தை எனும்போது எனக்கு அதிர்ச்சியாகக் கூட இருந்தது.

தமிழக மீனவர் வாழ்வியல் சொல்லும் வங்கப் புதினம்

இந்த நாவலின் ஆசிரியர் பெயர் போதி சத்துவ மைத்ரேய. இந்திய அரசின் ஆழ்கடல் மீன் ஆராய்ச்சித் துறை ஆராய்ச்சியாளராக, தமிழ்நாட்டில் பணிபுரிந்த அனுபவங்களை உள்ளடக்கி, இந்த நாவலை எழுதியுள்ளார்.

நெல்சன் மண்டேலா: கற்றுத் தொடர வேண்டிய வாழ்க்கை !

இந்த நூல் மண்டேலாவின் ‘சுதந்திரத்தை நோக்கிய நெடும்பயணம்’ நூலைத் தழுவி எழுதப்பட்டு இருக்கிறது. புரிந்துகொள்ள எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் தா.பாண்டியன். தோன்றின் புகழொடு தோன்றுக என்ற வாக்குப்படி தோன்றி அதற்காக தன் வாழ்க்கையையே தத்தம் செய்த மண்டேலா 1918 இல் தென்னாப்பிரிக்காவில் சோசா இனக்குழுவில் பிறந்தார். தந்தை இறந்ததால் தெம்பு அரசர் ரீஜண்டின் வளர்ப்பு மகனாக, சோசா இனக்குழுவின் வீரக்கதைகளைக் கேட்டு வளர்ந்தார் மண்டேலா. முக்கேஸ்வேனி, கிளாக்பெரி, ஷீல்டவுன் எனப் படித்து இறுதியாக ஸ்காட்லாந்து யாத்ரி நடத்திய […]