விரலால் உணர முடியும் ஒரு காதல் கடிதம் …

யோசித்துப் பாருங்கள் நமக்கு ஒரு வேற்று மொழியில் காதல் கடிதம் வந்து, அதை புரிந்து கொள்ள முடியாமல் திணறி, அதை வெறுமனே தடவிப் பார்க்கும் உணர்வு எப்படி இருக்கும்??

கூழாங்கற்கள்-1

இந்த வாரம் கரிசல் பூமியின் இலக்கியத்தை, அதன் மக்களை, அவர்களது வாழ்வியலைப் பற்றி பார்ப்போம் . மிகச் சிறந்த இலக்கியங்கள் அங்கே தோன்றியிருக்கின்றன. கரிசல் பூமியைப் பற்றி உன்னத கதை சொல்லி கி.ராஜநாராயணன் அவர்களின் வார்த்தைகளிலேயே பற்றிச் சில வரிகள்.. ‘நாட்டின் மிக உயர்ந்த அளவு மழை கொட்டும் இடம் சிரபுஞ்சி என்று சொன்னால், நாட்டின் மிகக் குறைந்த மழை பெய்யக்கூடிய இடம் வட்டாரமான கரிசல் பிரதேசம்.இந்த மண்ணை ‘கரும்பாலைவனம்’ என்று ஒரு விதத்தில் சொல்லலாம். என்றாலும், […]

கூழாங்கற்கள் !

கூழாங்கற்கள் அழகானவை..போக்கிடம் பற்றிய கவலையும் பூர்விகம் பற்றிய ப்ரக்ஞையும் இல்லாதவை. தங்களது இருப்பிடத்தில் சுகமாக இருக்கிறதோ, வருத்தங்களை சுமக்கிறதோ, வாழ்க்கை சிக்கலானதோ, சுழிகள் நிறைந்ததோ, ஆபத்தானதோ தெரியாது. ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாது, ரம்மியமான முகங்களை மட்டுமே நமக்குக் காட்டுபவை. இங்கேயும் அப்படித் தான் நாம் – மணலில் புதைந்திருக்கும் கற்கள், ஆற்றின் போக்கில் துலக்கமான தெளிச்சியான முகங்கொண்டு சிரிக்கும் கற்கள், குழந்தைகள் கையில் குண்ணாங்கல்லாகிய கற்கள், பதினைந்து பதினாறு மாடிகள் கொண்ட அலுவலகங்களில், அலங்காரத்திற்காக கண்ணாடி […]

குறுந்தொகை – The compilation of miscellaneous feelings in love

அழகன் முருகனைப் பற்றிய கடவுள் வாழ்த்துடன் துவங்கும் குறுந்தொகை முழுக்க முழுக்க காதல் தான். இருந்தாலும் எல்லா இடங்களிலும் அவர்கள் காட்டும் காதலை ரசிக்க முடியவில்லை.’ இவங்களுக்கு காதலிக்குறத தவிர வேற வேலையே இல்ல போல என்று சலிக்கும் படியாக இருந்தது. முக்கியமாக, வளையல் கையை விட்டு நழுவுவது, பிரிவால் உடல் மெலிவது, தேமல் தோன்றுவது போன்ற உவமைகள் பல இடங்களில் ரிப்பீட் ஆகும் போது…. பல வரிகள் உண்மையாகவே மனதை வருடும் படியாக இருந்தது.

ஸ்பைடர் பையன் – 1

                                                          இன்று காலையில் இருந்து தான்,அவனது மூக்கிலிருந்து,வலை வருவது நின்றிருந்தது.கடந்த இரவில் கட்டிலில் படுத்துக் கொண்டே,கைக்கெட்டாத தூரத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த மொபைலை எடுக்க கையை நீட்டினான்.சிலந்தி வலையானது அவன் கையிலும்,மூக்கிலும்(சளியைப் போல),கொஞ்சம் கண்ணிலிருந்தும் வந்தது.மொபைலும் கைக்கு வந்தது.தனக்குக் […]

‘தண்ணி..தண்ணி…’

திருப்பூரின் தலையெழுத்தை ரோலர்க்கோஸ்டர் பயணத்தைப் போல ,ஏற்ற இறக்கங்களுடன் மாற்றியமைத்த ,சாயத் தொழிற்சாலைகளைப் பற்றி,அவற்றின் வருகையைப் பற்றிய தகவல்களை திருப்பூரைச் சேர்ந்த திரு.சோமனூர் செல்லப்பன் தனது ‘தண்ணி..தண்ணி..’ சிறுகதையில் ஆவணப்படுத்தியிருக்கிறார். திருப்பூரின் கதையும்,ஒரு புளியமரத்தின் கதையும்(சு.ரா) கிட்டத்தட்ட ஒன்று தான்.அந்த பூரம் மகாராஜாவின் ஆணையின் பேரில் புளிக்குளம் மண் மூடி சமநிலைப்பட்டவுடன்,புளியமர ஜங்சனாக பெரிய டவுணாக பரிணமித்ததே!!! அது போல குலாம் காதர் என்பர்,கொல்கத்தா சென்றிருந்த போது,ஒரு ரிப்பேரான நிட்டிங் மிஷனை திருப்பூர் கொண்டு வந்து,பின்னலாடை நூற்க […]