மந்திரக்கோல் வேலைகளால் கறுப்புப்பணம் ஒழியுமா?

8.11.2016 இரவு சுமார் 8.00 மணிக்கு ஊடகங்களில் திடீர் அறிவிப்பு. இனிமேல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பே அது. சில நிமிடங்களில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகள் செயலாற்றுப் போகிறது. பலர் செய்தி கேட்டு தலையில் இடிவிழுந்தது போன்று நிலைகுலைந்தனர். சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை ஐநூறு மற்றும் ஆயிரமாக மாற்றி தங்களிடமே பத்திரப்படுதியவர்கள், வங்கியைப் பயன்படுத்தாதவர்கள், இன்னும் கூட சம்பளத்தை ரூபாய் நோட்டுகளாகவே வாங்கிக் கொண்டிருப்பவர்கள், […]

வேலை செய்வதைப் பற்றி பேச ஒரு அருகதை வேண்டாமா ஆசானே..!

பாவம்… வங்கியிலும், தொழிற்சாலையிலும், வயல் வெளியிலும், கட்டிடங்கள் கட்டுமானத்திலும் வேலை செய்யும் தொழிலாளர்களையும் ஊழியர்களையும் நோண்டி வம்பு வளர்த்து உதை வாங்கதீங்க என்றும் சொல்ல ஆசைப்படுகிறோம்…!

சீனப் புரட்சியின் ஒரு பெரும் அத்தியாயமான மாவோவின் நீண்ட பயணம்…

சீனப் புரட்சியின் திருப்புமுனையாக அமைந்த நெடும் பயணத்தின் நெடுகிலும் விதைக்கப்பட்ட நாற்பதாயிரம் போராளிகள், 1946 அக்டோபர் முதல் தேதி விடுதலை பெற்ற சீன மக்கள் ஏந்திய கொடிகளில் நட்சத்திரங்களாக மலர்ந்தார்கள்.

ஆண்பால் பெண்பால் அன்பால்…

ஆணும் பெண்ணும் முரண்களால் பின்னப்பட்டவர்கள். மனித இயக்கத்தின் பெரிய சுவாரஸ்யமே அதுதான். ஒருவரை ஒருவர் நேசித்து மதித்துக் கொண்டாடித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்மத்தையும் வெறுப்பு உணர்வையும் பரவச் செய்யக் கூடாது.

“ஜாதிகளிடம் ஜாக்கிரதை” & “டாக்டர்.ஷூமேக்கர்”… “நீலம்” நிகழ்த்திய நெகிழ்ச்சியும், ஏற்றிய நெருப்பும்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையிடப்பட்டது. இரண்டு ஆவணப்படங்கள். நீலம் அமைப்பின் சார்பில் இந்த ஆவணப்பட வெளியீடு நிகழ்வை முத்தமிழ் ஒருங்கிணைத்திருந்தார். வணிகப்படங்களின் தேவையையும் ஆவணப் படங்களின் தேவையையும் ஒப்பீடு செய்ய முடியாது என்றாலும், ஆவணப்படங்கள் வணிகப் படங்களுக்கு நிகராக தேவை என்பதையே திரையிட்ட “ஜாதிகளிடம் ஜாக்கிரதை” மற்றும் “டாக்டர். ஷூமேக்கர்”… ஆகிய இரண்டு ஆவணப் படங்களும் முன்மொழிந்தன. ஓவியர் சந்துரு, இயக்குநர்கள், ராம், சுசீந்திரன், பாண்டிராஜ், மற்றும் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ்.வி.ராஜதுரை, வெங்கடேஷ் […]

ஸ்வாதி – ராம்குமார்: பொதுப்புத்திக்கு இரைபோடும் ‘நீதி பரிபாலனம்’

முடியாட்சியின் போதே, அரசனைக் கேள்வி கேட்ட சிலப்பதிகாரக் கதையும் இங்கேதான் இருக்கிறது. பிரச்சனைகளின் மூலம் எது?, இயங்கியல் போக்கு எது? என்று பொது வெளியில் விவாதத்தை முன்னெடுப்பதும், மாற்று சிந்தனையினை வலுப்படுத்துவதும் காலத் தேவையாக இருக்கிறது.

கோவை கலவரம் உணர்த்தும் பாடம்…

கோவையில் இந்துமுன்னணி  செய்தித்தொடர்பாளர் சசி குமார் கொலையும், அதில் மதஉணர்வு கலந்து, கீழ்த்தரமான முறையில் அரசியல் லாபம் அடையும் நோக்கில், நடத்தப்பட்டுள்ள வெறியாட்டங்களும், சாதாரண  மக்களின்  மனதில்  கடும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. RSS துவங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, அந்த அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து  இதுபோன்ற  சீர்குலைவு வேலைகளை  ஓய்வில்லாமால்  செய்துவருகின்றன. இதற்காக  கொலை, கொள்ளைகள் முதல் சில்லறைத்தனமான அல்லது  கீழ்த்தரமான வஞ்சனைகள்  நிறைந்த  சூழ்ச்சிகளையோ  பிரச்சாரங்களையோ  கூடச் செய்யத் தயங்கியது இல்லை. […]

Parched – நாலு பேருக்கு சொல்ல வேண்டும் என தூண்டிய கதை!

நாம் கடந்து வந்த கலாசாரத்தின் சிறு துகள்கள் இன்னமும் இந்த கிராமங்களில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நீங்கள் படம் பார்க்கும் போது உணரலாம்!

கோவை வன்முறைகளும் படிப்பினைகளும்….!

முதலில் கோவையின் கம்யூனிஸ, பெரியாரிய, தலித்திய  மற்றும் முற்போக்கு அமைப்புகளுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும். 97ஆம் ஆண்டினை போலவே பிணம் திண்ண காத்திருந்த காவி பயங்கரவாதிகளின் எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டதால். கூடவே சீண்டலுக்கு செவி சாய்க்காமல் எந்த வித எதிர் வன்முரையிலும் ஈடுபடாமல் இருந்த இஸ்லாமிய மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் நன்றிகள். 97 ஆம் ஆண்டு நிகழ்வுகளின் அனுபவ படிப்பினையும், அறிவியலின் வளர்ச்சியும் இம்முறை கொஞ்சம் உதவி செய்துள்ளது. 97ல் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர்களின் நிலை என்ன? […]

நரோடா காவ்ன் . . . . . . . !

பின்புறம் டீ பாய்லர் வைத்துக் கட்டப்பட்ட சைக்கிளில் முகமெல்லாம் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான் ரபீக். அன்று காலை எண்ணெயால் துடைக்கப்பட்டிருந்த பச்சை வண்ணமடிக்கப்பட்ட அவனது சைக்கிள் பளிச்சென்று இருந்தது. ஹாண்டில்பார்களின் இரு முனையிலும், பெண்கள் சடை முடியப் பயன்படுத்தும் குஞ்சம் போன்ற ஒரு பொருள் அழகுக்காக பொருத்தப்பட்டிருந்தன. அவை ஹாண்டில்பார்களுக்கு வால் முளைத்தது போல காற்றில் படபடத்துப் பின்னோக்கிப் பறந்தது. ஒரு மஞ்சள் நிறத் துணிப்பை ஹாண்டில் பாரில் தொங்கிக் கொண்டு இருந்தது. அதிலிருந்த பொருளை அடிக்கடி […]