வன்மத்தின் காட்டுப் பாய்ச்சல் …

ஒருநாள் இரவில், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பிரதான சாலையிலிருந்து வீடு திரும்பும் குறுக்குச் சாலையில் திரும்பும்போதுதான் அந்த ஞாபகம் வந்தது. வீட்டில் கோடை விடுமுறைக்காக அன்றுதான் ஊருக்குச் சென்றிருந்தார்கள். இரவு உணவை வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். மறந்துபோய் வீடு வரை வந்துவிட்டேன். அங்கிருந்து ஹோட்டலுக்குத் திரும்பி செல்ல மீண்டும் நான்கு கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியிருந்ததால், அருகிலிருந்த வண்டிக்கடையில் பார்சல் வாங்கிச் செல்லலாமென முடிவு செய்தேன். நான் அந்த வண்டிக்கடைக்குச் சென்றபோது ஒரே ஒருவர் […]

அஹிம்சையெனும் பேராசை …

வட இந்தியப் பயணம் சென்றிருந்தபோது, வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் சுற்றியலைந்து கொண்டிருந்தேன். முதலில் சென்றது கோல்கொண்டா கோட்டைக்கு. ஏறத்தாழ 300 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மிச்சம் என் கண்முன்னே பிரம்மாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அரசர்களாக மாறி மாறிக் கட்டமைத்து எழுப்பி, 1600 ம் ஆண்டுகளில் முடிவுற்ற கட்டுமானத்தை, வெளியில் நின்று விழிமலர்ந்து கண்டுகொண்டிருந்தேன். எட்டு நுழைவாயில்களைக் கொண்ட கோட்டையில், தற்போது அரசால் அனுமதிக்கப்பட்ட நுழைவாயில் ஒன்றின் வழியாக உள்ளே நுழைகிறேன். என் வாழ்நாளில் […]

அதிகாலைப் பேரியக்கம் …

வட இந்தியாவை நோக்கி நெடுஞ்சாலைகளின் வழியாக ஒரு பயணம் மேற்கொண்டிருந்தேன். செல்லும் வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் தங்கியிருந்தேன். நான் தங்கியிருந்தது ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டின் கடைசி மாடி. அன்று அதிகாலையிலேயே தூக்கம் கலைந்து போனது. எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றேன். தடுப்புச் சுவரில் சாய்ந்து நெடுநேரம் அப்படியே நின்றிருந்தேன். கண்முன்னே அந்தப் பெரு நகரம், புள்ளிபுள்ளியாக விளக்கொளியைச் சிதறடித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ ஒரு மசூதியிலிருந்து பாங்கு ஓதும் சத்தம் என் காதுகளை வந்தடைந்தது. காலைப் பனியின் […]

டப்பர் வேர் தயிர்க்காரி …

சென்ற வாரத்தில் ஒரு நாள் காலையில் ஏதோ ஒரு வேலையாக இருந்தேன். மிர்னி, ஒரு டப்பர்வேர் பாத்திரத்தில் இருந்த தயிரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தயிரு வேணுமா தயிரு…தயிரு வேணுமா தயிரு…என்று கூவியபடியே என்னருகில் வந்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் எனக்கும் தயிருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது. அது இருபத்தைந்து வருடத்திற்கு முந்தய தொடர்பு. அந்த தொடர்பை ஒரே நொடியில் என் ஞாபகச் சிறையில் இருந்து மீட்டெடுத்து விட்டாள். எனக்கு பத்து வயது. […]