தலைநகரை செந்நகர் ஆக்கிய தொழிலாளி வர்க்கம் . . . . . . . . . . . . . . !

டெல்லி ராம்லீலா மைதானம் ஆயிரக்கணக்கான போராட்டங்களை சந்தித்திருக்கிறது. ஆனால் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றதை போன்ற ஒரு போராட்டத்தை, டெல்லி மக்கள் அண்மை காலத்தில் ராம்லீலாவில் பார்த்திருக்க மாட்டார்கள். செங்கொடிகளை கைகளில் ஏந்தியபடி லட்சக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் கண்களில் நம்பிக்கையை சுமந்தபடி அமர்ந்திருந்தனர். தங்கள் விடியலுக்கான முழக்கங்களை அவர்கள் சுமந்து கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒரு அக்கினி குஞ்சு போலவே காட்சியளித்தனர். இது முற்றிலும் மாறுபட்ட போராட்டம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்களும், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக விவசாயிகளும் […]

காதல் – பேரன்பின் ஆதி ஊற்று . . . . . . . . . . . !

யாருக்கு தான் பிடிக்காது காதல்.. அல்லது யாரைத் தான் பிடிக்காமல் விட்டு விடுகிறது காதல்.. வருடத்தின் சில மாதங்கள் மழையையும், கோடையையும், வசந்தத்தையும் தன்னுடவே அழைத்து கொண்டு வருகின்றது என்றால், பிப்ரவரி மாதம் மட்டும் காதலர் தினக் கொண்டாட்டங்களையும், அது ஏற்படுத்தும் மகிழ்ச்சியையும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கைபிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடுகிறது. பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினம், வேலன்டைன் தினமாக கூறப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ மத பாதிரியாரான வேலன்டைன் […]