யோகா, இரக்ஷா பந்தன், அடுத்து..?

உலகெங்கும் யோகா நடந்த புகைப்படங்களையும், யோகா குறித்த மையங்களையும் வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள். யோகா யாருக்கானது என்றும், ஏன் என்றும் உங்களுக்குப் புரியும்.

மேகியை விசமாக்கியது எது? – என். சிவகுரு

குழந்தைகள் மத்தியில் பிரபலமான முட்டை வடிவிலான கிண்டர் ஜாய் (KINDER JOY) எனும் சாக்லேட் போன்ற பண்டம் (ரூ 30) உலகத்தில் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பொருள்.

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா?

மே மாதம் 16 ஆம் தேதி 11 மணிக்கு துவங்கி இன்று வரையிலும் “இந்தியாவே” மோடியின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மெலிந்த தேகத்தோடு இருந்த ரூபாயின் மதிப்பு, ஆணழகன் போன்று புஜம் பெருத்து, நரம்பு புடைத்து எகிறிக் குதிக்கிறதாம். இந்தியாவின் பங்குச் சந்தைகள் எப்போதும் இல்லாத அளவிற்கு துள்ளி விளையாடுகிறதாம்.

வனாந்திரங்களில் அலைவுறும் கரும்பலகை மனிதர்கள்!

எஸ்.கருணா மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வந்த நாளிலிருந்தே மனம் அமைதிகொள்ளாமல் தவிக்கிறது எனக்கு. ஏதோ ஒரு குற்றஉணர்வு பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு எங்கள் திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டும் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் கடைசி இடத்தையே பிடித்திருப்பதுதான் காரணம். இயல்பிலேயே எங்கள் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம்தான். தொழில்வளம் என பெரிதாக எதுவும் இல்லை. முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியிருக்கிற பெரும் நிலப்பரப்பு தான் எங்களுக்கு சொந்தம். அரசுகளின் “வளர்ச்சி” கொள்கைகளினால் […]

பழனியும் பறவைகளும்..

பழனியில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் கொங்கூர் குளத்திற்கு குளிர் காலங்களில் ஏராளமான பறவைகள் வருவது பற்றி அறிந்து கொண்டேன். 2011 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக கொங்கூர் சென்றேன். பழனியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் தாசநாயக்கன்பட்டி என்ற ஊரில் இருந்து 3 கி.மீ மேற்கு நோக்கி சென்றால் கொங்கூர் குளத்தை அடையலாம். குளத்தை நெருங்குவதற்கு முன்பே சாலையின் குறுக்கே கௌதாரிகள் (Grey Francolin) கடந்து சென்றன. பறந்து விரிந்திருந்த குளத்தில் நீர் நிரம்பி இருந்தது. பவளக்கால் உள்ளான்களை முதல் முறையாக பார்த்தேன். அவை குளத்தின் கரையில் நீர் குறைவான இடங்களில் நின்று கொண்டிருந்தன.

‘பூசனிக்காய்’ அம்பி – புதுமைப்பித்தன்

ம்பியின் தலை வழுக்கை. அதன் மேல்பொன்னிறமான பூனை மயிர். பூசனிக்காயின் வர்ணத்தைப் பெற்றிருப்பதிலிருந்து அந்தப் பெயரை அவனுக்குக் கொடுத்திருப்பார்கள் என்று ஒரு கட்சியினர் வாதாடினார்கள். இதற்கு நேர்மாறாக அம்பிக்குப் பூசனிக்காயின் மீது இருந்த அபாரப் பிரேமையினால் அப்பெயர் வந்திருக்கலாம் என்று உறுதிபடக் கூறியது மற்றொரு கட்சி.

உங்கள் வாழ்வில் நிழல் உள்ளதா?

நெகிழிப் பைகளால் சுற்றுச் சூழலுக்கும், நமது வாழ்விற்கும் கெடு என்று தெரிந்த பிறகும், அக்கொடும் தீங்கோடு எப்படி நம்மால் சமரசமாக முடிகிறது? உணவோடு கலந்து இரசித்து உண்கிறோமே, எப்படி முடிகிறது?

கோடையில் ஏன் தாகமெடுக்கிறது?

சிறுநீரகம் நம் உடலின் முக்கிய உறுப்பு..! இரத்தத்தை சுத்தம் செய்வது, உடலில் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது, உடம்பில் எவ்வளவு நீர், எவ்வளவு உப்பு, எவ்வளவு எலக்ட்ரோலைட் (Electrolite) வேண்டும் என்பது போன்ற ஏராளமான பணிகளை செய்கிறது நம் உடலில் உள்ள கை முஷ்டி அளவே உள்ள சிறுநீரகம்..

உருகும் புவியின் மீது தொடரும் சூதாட்டம் !

“உலகிலுள்ள பெரும்பாலான கடல்களும் இன்னபிற இயற்கை அமைப்புகளும் பருவநிலை மாற்றத்தால் கடும் விளைவுகளைச் சந்தித்து வருவதை உலகின் அனைத்து கண்டங்களிலும் மேற்கொண்ட அறிவியல்பூர்வ ஆய்வுமுடிவுகள் ஆதரங்களுடன் உறுதி செய்கின்றன. புவியின் வெப்பநிலை உயர்வே இப்பாதிப்புகள் அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றன.”