குப்பைக் கிடங்கைவிட சேரி மக்களின் நிலை கேவலமா . . . . . . ???

(2015 மழை வெள்ளத்தை காரணம் காட்டி அகற்றப்பட்டபோது ஆய்வு செய்து எழுதியது…) இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதாகக் கூறப்படுகிற இதே காலச்சூழலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிராமங்களிலும் நகரங்களிலும் ஏழை எளிய குடிசைவாழ் மக்களின் இடப்பெயர்ச்சி அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. தங்களது வாழ்வாதாரத்துக்காக இடம்பெயர்வது ஒருபுறமிருக்க, இயற்கைச் சீற்றத்தின்போது அல்லது யுத்தம் போன்ற அவசர நிலைமையின் காரணமாக இடம்பெயர்வது இன்னொருபுறமிருக்க, தற்போது மக்களை அப்புறப்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தில் அடிகொடுத்து, அவர்களுக்கு எதிரான ஒரு யுத்தம் தொடுக்கப்படுகிறது. இதற்கு வளர்ச்சி […]

அடக்குமுறை லத்திகளில் ஆணென்ன, பெண்ணென்ன?

ஆறு நாட்கள் அமைதியாக அறவழிப் போராட்டம் நடத்திய மாணவர்கள் என்று சொன்ன அதே வாய் தான் 7-வது நாளில் தீவிரவாதிகள் என சித்தரித்து போராட்டத்திற்கு முடிவுக்கட்டியது. இதில் பலி ஆடுகளாக்கப்பட்டது அப்பாவி மீனவக் குப்பத்து மக்களும், தலித் மக்களும்தான். ஜல்லிக்கட்டு தடை நீக்கம் என்ற கோரிக்கை வைத்து சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை காவல்துறை கடந்த 23ம் தேதி தனது முழு அதிகாரத்தை கொண்டு ஒடுக்க முயன்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் “எங்கள் […]

பிரமாண்ட போர்க்களம்: ருத்ரமாதேவி ஒரு பார்வை…

என் மகன் வருவான் என்னை காப்பாற்ற என்று கூறி 25ஆண்டு காலம் சிறையில் சங்கிலியில் பிணைக்கப்பட்டு தள்ளாடி தள்ளாடி சுள்ளி பொருக்கும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ள அனுஷ்கா தான். ருத்ரமா தேவியில் மதம்பிடித்த யானையை அடக்கும் பெண்ணாக, வாள் முனையில் ஒரு தேசத்தையே கட்டி ஆளும் ராணியாக, பல ராஜ்யங்களை வீழ்த்தும் ஆளுமையாக, ஒரு நாட்டின் வீரத்தாயாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.