இந்திய சட்டத்தில் ஆணாதிக்கக் கூறுகள் !

பெண்கள் தனக்கு பிடிக்காத கணவனை விட்டு விலகியிருக்க வேண்டும் என்ற முடிவை எளிதில் தைரியமாக எடுத்துவிட முடிவதில்லை. ஆனால், அப்படி எடுப்பவர்களுக்கு சட்டம் ஏதுவாக இல்லை.

அரசு ஒடுக்குமுறையின் அடையாளச் சின்னமாய் ஒரு பெண் !

ஒரு பெண், ஏழைப் பெண், இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண். இந்த சமூகம் பல விதமான மதிப்பீடுகள் வைத்திருக்கிறது. பெண் என்பவள் ஆணுக்கு குறைவானவள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண், மற்ற சமூகத்தை சேர்ந்த பெண்களை விட குறைவானவள், அதுவும் ஏழையாக இருந்து விட்டால் அவளுக்கு இந்த சமூகம் எந்த மதிப்பையும் தருவதில்லை. மூன்று படி நிலைகளில் ஒடுக்குமுறையை சந்தித்து வருகின்றனர் விஜயா போன்ற பெண்கள்.

அக்னி நட்சத்திரம் (அ) கத்திரி வெயில் எனும் மூட நம்பிக்கை …

ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (அ) கத்திரி வெயில் குறித்த அச்சமூட்டுதலும், செய்திகளும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இது அறிவியல் உண்மை இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம் அளித்திருக்கிறார். அக்னி நட்சத்திரம் என்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை எனவும், அப்படியொரு கருத்தாக்கம் தவறானது என்றும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். அறிவியல் அல்ல: கத்திரி வெயிலுக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: […]

திருநங்கையற்கு பிரதிநிதித்துவம்: கனவு நிஜமாகுமா?

“யாரும் முதல் முறையே வெற்றி பெறுவதில்லை. அரசியலில் உள்ள ஜாம்பவான்கள் எல்லோரும், பல தோல்விகளையும் அவமானங்களையும் கண்டு தான் வென்றுள்ளார்கள். இந்த முறை தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் இருப்பேன்” – பாரதி கண்ணம்மா.

வாஸ்து மந்திரிகளும்… வாஸ்தவமும் !

கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு குடியிருப்புகளை வாஸ்து முறைப்படி மாற்றிக் கட்டக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வாஸ்து உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை எதிர்த்து உத்தரவிட்டது நல்ல செய்தி தான். ஆனால், இப்படியொரு உத்தரவு போட்டு தடுக்க வேண்டிய அளவுக்கு பிரதிநிதிகளே பின்பற்றி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். கர்நாடகாவில் குறிப்பாக விதான் சௌதா, கர்நாடகாவின் தலைமைச் செயலகமாக இயங்கி வரும் புராதனச் சிறப்பு மிக்க கட்டிடம். சமீபத்தில் ஒரு அமைச்சர் விதான் சௌதாவில் இரண்டு அறைகளுக்கு […]

“கற்பை” அழிப்போம்

சில மாதங்களுக்கு முன் நாடெங்கும் போராட்டங்களை கிளப்பிய “நிர்பயா” வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இது தான் (?). தூக்கு தண்டனை சரியா தவறா என்ற விவாதங்கள் இரண்டு கேள்விகளுக்குள் அடங்கி விடுகின்றன. தூக்கு தண்டனை ஒரு மனிதஉரிமை மீறலா? உயிரை பறிக்கும் உரிமை அரசிற்கு உண்டா? இது முக்கியமான விவாதம் என்றாலும் இதை விட முக்கியமான ஒரு விஷயம் மிக எளிதாக […]

சமயலறையிலிருந்து விடுதலை …

இந்த தலைப்பில் எழுதுவது சற்று சலிப்பாக இருக்கலாம். நிலைமைகள் மாறிவிட்டனவே. பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று துச்சமாக நினைக்கலாம். ஆனால் இதை பேசுவதை நாமிருக்கும் சமூகச் சூழல் கட்டாயமாக்குகிறது. அட! எத்தனை ஆண்கள் சமயலறையில் பெண்களுக்கு”உதவி” செய்கிறார்கள் தெரியுமா? என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த “நீயா நானா” நிகழ்ச்சியின் தலைப்பு: பெண்களுக்கு ஆண்கள் சமையலறையில் உதவலாமா? கூடாதா? ”நான் ஆண். என் அம்மாவிற்கு உடல் கோளாறு ஏற்பட்ட […]