பஞ்சாயத்து சொம்பு ஏன் சிரியாவுக்கு போகுது?!?

“இதனை ஏதோ காட்டுத்தனமான போர் என்று நினைக்கவேண்டாம். இது மனிதகுல விடுதலையினை மீட்டெடுக்கிற போராட்டம்” – வியட்நாம் போர் குறித்து அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், 1964 Image courtesy : Wikimedia “ஆப்கானை மீட்கவந்த போராளிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டும்” – முஜாகிதீன்களாக இருந்த தாலிபான்கள் குறித்து அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், 1985 “ஜனநாயகத்தையும் மனிதவுரிமைகளையும் நிலைநாட்டுவதற்காகவும், பனாமாவில் வாழ்கிற அமெரிக்கர்களின் உயிரைக் காப்பாற்றவுமே பனாமாவோடு போருக்குச் செல்கிறோம்.” – அமெரிக்க அதிபர் ஜார்ஜ் […]

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2)

1940 செப்டம்பரில், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பாசிச நாடுகள் ஒன்றிணைந்து போர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. உலகம் முழுவதையும் மூவருமாக ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பதுதான் அவ்வொப்பந்தத்தின் ஒரே குறிக்கோள். ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டு, கிழக்கே சோவியத் தொடங்கி இந்திய எல்லை வரை உலகின் பாதியை ஜெர்மனியாகவோ ஜெர்மனியின் காலனியாகவோ மாற்ற நினைத்தார் ஹிட்லர். ஆஸ்திரியா, ரைன்லாந்து, மேற்கு போலந்து மற்றும் சோவியத்தின் ஸ்டாலின்கிராடு போன்ற பகுதிகளை ஜெர்மனியின் பூர்வீகப் பகுதிகள் என்று உரிமை கோரியது ஜெர்மனி. […]

அமெரிக்காவின் ‘அங்காடி தெரு’

‘அமெரிக்கா ஒரு சொர்கபுரி’ என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டின் ஆட்சியாளர்களைப்போலே அவர்களின்  திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்துவந்திருக்கின்றன. தேசபக்தித்திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்கமுடியும்? அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவபோக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை. டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும் […]

பெண்களுக்கும் ஆசைகளுண்டு… அதன்படி வாழ உரிமையுமுண்டு…

1994 இல் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பெரும்பான்மையினரான ஹூட்டு இனத்தினர் சிறுபான்மை டூட்சி மக்களை இனப்படுகொலை செய்த நிகழ்வினை சொல்லும் திரைப்படமான “Shaking hands with the Devil” இல் ஒரு காட்சியில் ஹூட்டு இனத்தை சார்ந்த பெண் பிரதமரிடம் ஐ.நா. தூதுவர் கேட்பார், “நீங்க ஹூட்டுவா? டூட்சியா?” “நான் ஹூட்டு தான்” – அப்பெண் “நெனைச்சேன்” – தூதுவர் “ஹூட்டுவாக இருந்தா என்ன? டூட்சியாக இருந்தா என்ன? பெண்ணாக இருக்கிறேனே! அதைவிடவா பெரிய கொடுமை இருந்துவிடப்போகிறது? […]

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1)

1945 இல் அமெரிக்காவின் சங்க்ரே டி கிரேஸ்டோ மலைப்பகுதியில் ஒரு கட்டிடத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விடியற்காலைப் பொழுதினை பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். விஞ்ஞானி ஒப்பன்ஹைமரின் தலைமையில் மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அணுவாயுதத்தைப் பரிசோதித்த நாள்தான் அது. அப்பரிசோதனைக்கு “டிரினிடி” என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேவேளையில், அவ்விடத்திற்கு சில மைல் தூரத்தில் விஞ்ஞானிகள் குழுவின் கண்காணிப்பில், பிரிகேடியர் ஜெனரல் லெஸ்லி க்ரோவ்சின் தலைமையில் அமெரிக்காவின் போர் தலைமையகம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சூரியனை விட மிகப்பெரிய […]

மெக் டொனால்டை எதிர்த்துப் போராடும் சிறுகிராம மக்கள்….

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தண்டேனங் என்கிற மலைப்பிரதேசம் அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் காடுகள் சூழ்ந்த சிறுசிறு மலைகள்தான் அப்பகுதியின் அழகு. அப்பிரதேசம் முழுவதிலும் ஆங்காங்கே உள்ள கிராமங்களில் சிறிய அளவிலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தண்டேனங் சிகரத்தின் மீது நின்றுபார்த்தால், சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் அழகுற காட்சியளிக்கும். பெல்கிரேவ், எமரால்டு மற்றும் ஜெம்புரோக் போன்ற பகுதிகளுக்கு நடுவே மலை இரயில்களில் பயணிப்பதும் சுற்றுலாவாசிகளுக்கு சுகமான அனுபவமாக இருக்கும். 2085 பேர் […]