துப்பறிவாளன் – விமர்சனம் . . . . . . . !

­மச்சான் மிஷ்கின் ஷாட்டு மாதிரி இருக்குடா என்று குறும்பட இளசுகள் சிலாகிக்கும் அளவு தழிழில் தனக்கென பிரத்யேக திரைமொழியை உருவாக்கி காட்டியவர் மிஷ்கின். கேமராவில் பதிவு செய்வதல்ல சினிமா , கேமரா பேசுவதே சினிமா என்பதை வெகுஜன பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தவர். துப்பறிவாளனில் கேமரா பேசியிருக்கிறதா ? அபாரமாக பேசியிருக்கிறது. காட்சிகளை ஆழ்ந்த  அனுபங்களாக்குவதில் பிற மிஷ்கின் படங்களைப் போலவே துப்பறிவாளனும் ஜெயித்திருக்கிறது. ஆனால் , ஷெர்லாக் ஹோம்ஸ் பிரியர்களுக்கு சோளப்பொரியை மட்டுமே விருந்தாக படைத்திருக்கிறது துப்பறிவாளன். […]

இப்போது பரிணாமம் நிகழவில்லையா . . . . . . ?

எந்த உயிரும் நேரடியாக பூமியில் தோன்றவில்லை, ஒற்றை செல் சிற்றுயிரிலிருந்து காலப்போக்கில் ஒவ்வொரு வகை உயிரும் பரிணாமம் அடைந்தது என்பது டார்வின் முன்வைக்கும் பரிணாமம் குறித்தான கோட்பாடு. இக்கோட்பாடு இன்னும் 100 சதவீதம் நிறுவப்படவில்லையெனினும், உயிரின போக்குகளை புரிந்துக் கொள்வதன் மூலம் இக்கோட்பாடு உலகளாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உயிரின வளர்ச்சி ஏணிப்படி குறித்து பரிணாமம் குறித்தான கோட்பாடு சொல்வது என்னவென்றால்.. ஒற்றை செல் உயிர்களிலிருந்து புழு வகை உயிர்கள் தோன்றின.. புழு வகை உயிர்களிலிருந்து மீன்கள் […]

சீறிய வரலாறு . . . . . !

‘ நமக்கு ஓட்டரசியல் தேவையில்லை , தேவை மாற்று அரசியல் , மாணவர் அரசியல் ’   ‘ டெல்லிக்கு தமிழகம் அடிமையில்லை’ இவையெல்லாம் நேற்றைய சென்னை சாலை மறியலில் கேட்ட பேச்சுகள், முழக்கங்கள்.. கேன்சர், காச நோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கான மருந்துகளின் விலையை ஏற்றி இலாபம் பார்த்தது நோவார்ட்டிஸ் என்ற நிறுவனம், கின்லே, அக்வாஃபீனா யார் இந்த நிறுவனங்கள் ? இந்த விஷயங்களெல்லாம் நேற்றைய சாலை மறியலில் இளைஞர்களாலும், யுவதிகளாலும் முன்வைக்கப்பட்ட பேச்சுகள் . […]

மாவீரன் கிட்டு…

எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க… நாங்க எரியும் போது…. எவன் மசுர புடுங்கப் போனிங்க..? என்ற இன்குலாப் அய்யாவின் வரிகளை ஒரு கணமேனும் சிந்திக்கத் தூண்டினால்… அது ‘மாவீரன் கிட்டுவின் ’ மாபெரும் வெற்றியே.

குற்றமே தண்டனை – விமர்சனம்

சாமான்ய ரசிக மனதில் இப்படம் எவ்வகையான தாக்கத்தை நிகழ்தப் போகிறது எனத் தெரியவில்லை. ஆனால், நல்ல சினிமா ரசிகர்கள் நிச்சயம் ஆதரித்து கொண்டாட வேண்டிய படம். சில முரண்கள் உண்டுதான் படத்தில். ஆனால், முதலில் நிஜ சினிமாவை நோக்கிய இந்த அடுத்தக் கட்ட உடைப்பு கொண்டாடப்பட வேண்டியது.

தனிமை மனிதர்களும் – சமூக வலைதளங்களும்…

பணம், இலாபம், நுகர்வு என்று ஓடும் மனிதர்கள் உறவுகளின் மீதான பற்றை இழக்கிறார்கள். கூட்டு வாழ்க்கையை சுமையாக கருதுகிறார்கள். ஓடி ஓடி பணம் சம்பாதிப்பதில் சற்று நிதானம் ஏற்பட்டாலும் நாம் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர்.

தற்காப்பு – திரைப்பட விமர்சனம்

சிறிய அளவில் தாதாயிசத்தில் ஈடுபடும் நபர் ஒருவரோடு உரையாடுவேன்.. தனிப்பட்ட முறையில் அவரது வேறு சில பரிமாணங்கள் மீது எனக்கு மரியாதை உண்டென்பதால். அப்போது அவர் சொல்லுவார்… போலீஸ் தாண்டா தம்பி முதல் ரெளடி.. நாங்கெல்லாம் ஒன்னும் கிடையாது. எங்கள வேண்டாம்னு மேலிடம் முடிவு பண்ணுச்சுனா எப்போ வேணாலும் எங்கள போட்ருவானுங்க. என்று. கெளதம்மேனனின் காட்சிகள் முரண் நினைவுகளாக மனதில் நிழலாடுகிறது. காவல்துறையினர் மக்களுக்காக உயிரை விடவும் தயாராக இருப்பர் , சூன்யத்திலிருந்து ஒரு ரெளடி உதித்து.. […]

காக்கா முட்டை

மழையில் ஸ்லோ மோஷனில்.. வில்லனை ஓட ஓட வெட்டும் காட்சிகள் இல்லாத.. சண்டைக்காட்சிகளில், ஹீரோவின் கால் தரையிலேயே பதியாமல் வானிலேயே சுற்றி 100 பேரை அடித்து வீழ்த்துகிற சோதனைகள் இல்லாத.. நான் யார் தெரியுமா ? என் பேரு ஏன் மாஸ் தெரியுமா? என் பேரு ஏன் சுறா தெரியுமா? போன்ற வசனங்கள் இல்லாத.. திரைக்கதை டொக்கடிக்கும் போதெல்லாம், மெழுகுச் சிலைப் போன்ற பெண்ணுடன் டூயட் என்ற பெயரில் ஹீரோ பண்ணும் அழிச்சாட்டியங்கள் இல்லாத.. எப்பபாரு வீர வசனம் […]

காதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாடும்!

காதல் மீதான ஆதரவும் எதிர்ப்பும் இன்றைக்கு அரசியலாகி நிற்கிறது. தனி மனித உணர்வுகளை அரசியல் தீர்மானிப்பது உண்மைதான் என்றாலும், அரசியல் காய் நகர்த்தலுக்கு காதலர்கள் பலிகடாவாக்கப்படுவது இயல்பான அரசியல் நிகழ்வல்ல. ஒவ்வொரு காதலரும், அழகிய, ரசிக்கத்தக்க உணர்வாகவே காதலைப் பார்க்கின்றனர். இருப்பினும், காதல் தோல்விகளும் – சோகமும் கவ்வாத மனிதர்களே இல்லை. தங்கள் காதலை பாதுகாத்துக் கொள்ள – காதலர்கள் செய்ய வேண்டியது என்ன?

ராமா நீ கொல்லப்படுவாய் !

ராமா, ஓர் அருந்ததியத் தாயின் வயிற்றில் அவதரித்தால் உன் பக்தர்களின் கழிவை அள்ளிக் கொண்டிருப்பாய், குஜராத்தில் ஓர் இஸ்லாமிய தாயின் வயிற்றில் அவதரித்தால் கருவிலேயே கருவருக்கப்படுவாய், பாரதத்தில்
நீ உன் கோவிலில் அவதரித்தால் மட்டுமே பிழைத்தாய்….. அதுவும் பாபர் மசூதியை இடித்தது தவறென்று சொல்லி விட்டாயெனில், ராமன் நீ, கொல்லப்படுவாய் …