2016 – எழுதிய கட்டுரைகளும், ஒரு கோப்பைத் தேநீரும்…

சிறுவயதில் தினத்தந்தியின் குடும்பமலரில் கவிதைகள் வெளியாகவேண்டும் என்பதற்காக, அதன் மொழிநடையான பிற்போக்கு/ஆணாதிக்க காதல் கவிதைகள் பலவும் எழுதியிருக்கிறேன். அதில் ஒருகவிதையை வாசித்துவிட்டு நண்பரொருவர் கடுமையான விமர்சனத்தை வைத்தார்,

 

“இந்தவாரம் குடும்பமலரில் உன்னோட கவிதையை வாசித்தேன். இப்படியெல்லாம் எழுதலன்னாதான் என்ன? சமூகத்திற்கு எந்தவகையிலும் பயன்படாத குப்பைகளை எழுதித்தான் நீ எழுத்தாளர் ஆகனும்னா, அப்படியொரு எழுத்தாளனாகி என்ன கிழிக்கப்போற?”
என்றார்.
வெறுமனே பேருக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே பிற்போக்குத்தனங்களை எங்கேயும் எப்போதும் எழுதிவிடக்கூடாது என்பதை உணர்த்தினார் அந்த நண்பர். அதனை இன்றுவரையிலும் நினைவில் வைத்திருக்கிறேன்.

 

எழுதுவது என்னுடைய முழுநேரத்தொழிலோ அல்லது பகுதிநேரத்தொழிலோ கூட அல்ல. எழுதுவதற்காக இதுவரையிலும் நான் பத்து பைசா கூட சம்பாதித்ததில்லை. ஆனால் ஒவ்வொரு கட்டுரையையும் எழுதிமுடிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்கங்களை படிக்கவேண்டியிருக்கிறது; நூற்றுக்கணக்கான மனிதர்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது; எண்ணிலடங்கா ஆவணங்களைப் புரட்டிப்பார்க்கவேண்டியிருக்கிறது. எழுத்துதான் எனக்கு ஏராளமான நண்பர்களைப் பெற்றுத்தந்திருக்கிறது. அவர்களின் அன்பும் வாசிப்பும் தான் தொடர்ந்து எழுதவைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களில் பலரின் கேள்விகளும்தான் அடுத்தடுத்த கட்டுரைகள் எழுதுவதற்கு உத்வேகமளிக்கின்றன. “மாற்று.காம்” – இணையதளம் அதற்கு மிகப்பெரிய துணையாக இருந்துவந்திருக்கிறது.

2016இல் எழுதிய கட்டுரைகள்…

 

 1. சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? -1
 2. சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? -2
 3. சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? -3
 4. சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? -4
 5. இஸ்ரேலை ஆதரித்தாரா அம்பேத்கர்?
 6. இஸ்ரேல் உருவாகக் காரணமான ‘டேர் யாசின் படுகொலை’ (ஏப்ரல் 9)
 7. மோடி அரசுக்கு நேப்பாளம் எச்சரிக்கை: “எங்கள் நாட்டில் மூக்கை நுழைக்காதே”
 8. போராளிகளான பாலஸ்தீனப் பசுமாடுகள்
 9. ‘சாய்ராத்’ – ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஆவணம்…
 10. மத்திய கிழக்கின் வரலாறு – 1 (புதிய தொடர்)
 11. மத்திய கிழக்கின் வரலாறு – 2 (ஒட்டோமன் பேரரசு)
 12. மத்திய கிழக்கின் வரலாறு – 3 (ஒட்டோமன் பேரரசு)
 13. மத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)
 14. மத்திய கிழக்கின் வரலாறு – 5 (ஒட்டோமன் பேரரசு)
 15. மத்திய கிழக்கின் வரலாறு – 6 (ஒட்டோமன் பேரரசு)
 16. மத்திய கிழக்கின் வரலாறு -7 (இசுலாமிய இயக்கங்கள்)
 17. மத்திய கிழக்கின் வரலாறு -8 (இசுலாமிய இயக்கங்கள்)
 18. மத்திய கிழக்கின் வரலாறு -9 (இசுலாமிய இயக்கங்கள்)
 19. ‘பிகினி’யின் சோக வரலாறு
 20. எது உண்மையான புரட்சிகர கட்சி?
 21. அமெரிக்க அரசியலும், ஆலிவுட் அல்லக்கைகளும்…
 22. பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 1
 23. பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 2
 24. பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 3
 25. Politieke verleden Clinton maakt duidelijk dat zij geen feministe is
 26. ஜிமாவின் கைபேசி – சிறுவர் நூல்
 27. பாட்டாளிகளா ஐடி ஊழியர்கள்?
 28. அண்ணன் விற்பனைக்கு- சிறுவர் கதை (மொழிபெயர்ப்பு)
 29. ஆலிவுட் பார்வையில் அரபுலகம்(பிரான்சிலிருந்து வெளியாகும் ‘நடு’ இலக்கிய இதழுக்காக எழுதியது)

 

திட்டமிடல் பெரிதாக இல்லையென்றாலும், 2016இல் துவங்கிய “மத்திய கிழக்கின் வரலாறு” தொடரையும், இரண்டு நூல்களுக்காக சேகரித்துவைத்திருக்கிற தகவல்களை கட்டுரைத்தொடர்களாகவும் முடித்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன். கடந்த ஆண்டு எழுதிமுடித்த  “பாலஸ்தீனம் – சினிமாவும், வரலாறும்” நூலும் 2017இல் வெளியாகக் காத்திருக்கிறது. மாற்று வாசகர்கள், வாட்சப் அன்பர்கள், பேஸ்புக் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்…

நெடுந்தூர பயணத்தினிடையே சற்று இளைப்பாறி ஒரு கோப்பை தேநீர் அருந்தியபடி, வந்தபாதையினை சரிபார்த்துக்கொள்வோமே. அதுபோலத்தான் ஆண்டிறுதியும்.

-இ.பா.சிந்தன்

About இ.பா.சிந்தன்