நீங்களும் நானும் குரங்கா, சார்?

நான் ஒரு அரசுப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்து வருகின்றேன். மாணவர்கள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வு களையும் மூடநம்பிக்கைகளையும் களைய வேண்டியது மற்ற எவரை யும்விடஆசிரியர்களதுமிக முக்கியக் கடமை என்பதை உணர்ந்த பல ஆசிரியர்களுள் நானும் ஒருவன்.

மாணவர்களிடம்பேசும்போதும் வகுப்பறையில் பாடம் நடத்தும் போதும் கேள்விகள் நிறையக் கேட்கவேண்டும்.. அப்போதுதான் அந்தப்பாடத்தில்தெளிவு கிடைக்கும் என வலியுறுத்துவதுண்டு. அதே போல உனது தெருவில், கிராமத்தில் நடக்கின்ற,பார்க்கின்றபல விசயங்கள்குறித்தும் உனக்குள்ளே கேள்விகள்எழ வேண்டும். உனக்குப் பிடித்தவர்களிடம்அந்தக் கேள்விகளைக் கேட்கும்போது இந்தச் சமூகத்தில் நடக்கின்ற நல்லது கெட்டது அனைத்திற்கும் பின்னால் உள்ள காரணங்களை அறியமுடியும் என் பேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வகுப்பறையில் சார்லஸ் டார்வி னின் பரிமாணக் கோட்பாடு குறித்து மாணவர்களிடம் பேசினேன். அதில் மனிதன் குரங்கிலிருந்து தோன்றி னான். எந்தக் கடவுளும் படைக்க வில்லை என்றேன். உடனே ஒரு மாணவன் எழுந்து நானும் நீங்களும் குரங்கா சார் என்றான்.

வகுப்பறை முழுவதும் குபீர் சிரிப்பொலி. நானும் நீயும் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் குரங்கின் வழியாக, அல்லது குரங்கிற்கு மிக நெருக்கமான ஒரு உயிரினத்தின் வழியாக, படிப்படியாக பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு இன்றைய மனிதர்களாக மாற்றமடைந்திருக் கிறோம் என்றேன். அந்த மாணவன் தனது அம்மா, அண்ணன், உறவினர் களிடமெல்லாம் இதுபற்றி விவாதம் செய்து வந்திருக்கிறான்.

ஒரு நாள் ஆங்கிலப் பாடத்தை வழக்கம்போல் நடத்திக் கொண்டிருந் தேன்.. அதில்  All things made by God என்ற வாக்கியத்தை மொழி பெயர்த்துக் கூறினேன். திடீரென எழுந்த அதே மாணவன், என்ன சார் நீங்கதான் அன்னைக்கு கடவுள் இல்லைன்னு சொன்னீங்க. இப்போ கடவுள்தான் படைத்தார்னு சொல்றீங் களே என்றான்.

இரண்டில் எது உண்மை என்று எனக் கேட்டு என்னை வியப்பில் ஆழ்த்தினான். கடவுள் என்ற வார்த்தை நமக்கு அனைத்தையும்அளிக்கும் இயற்கையை, சூழலைக் குறிக்கும் எனக் கூறி சமாளித்தேன். இந்நிகழ்வு நமது பாடப்புத்தகங்களில் களைய வேண்டியபல விசயங்கள் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஒரு வாரம் கழித்து நெகிழிப்பை குறித்து விரிவாக, ஒரு குறும்படம் மூலமாக விளக்கினேன். நெகிழிப் பைகளை ஒழிப்பது நமது ஒவ்வொரு வரின் கடமை என முழங்கினேன். அடுத்த நாள் நான் கடையில் வாங் கிய உணவை ஒரு நெகிழிப்பையில் கொண்டு சென்றேன். பிடித்துக் கொண்டான் அதே மாணவன். சார் கையில என்ன என்றான். சொன்னேன். சரிங்க சார், நேற்று நீங்கதான் இதை ஒழிக்கணும்னு சொன்னீங்க. அப்புறம் நீங்களே கடைப்பிடிக்கவில்லை என்றால் என்ன சார் அர்த்தம் என்றான். பதில் கூற முடியாமல் பம்மினேன்.

சாரிடா… இனிமேல் பயன்படுத்த மாட்டேன். இந்த ஒரு தடவை எக்ஸ்கியூஸ் கொடுத்துடுவோம் என்றேன்.
ஆசிரியர்களாகிய நாம் வகுப்பறை யில் சொல்லக்கூடிய விசயங்களை மாணவர்கள் கவனமாகக் கேட்டு கேள்விகள் எழுப்புவதை நமக்கு எதி ரான செயலாக நினைக்க வேண்டாம். கேள்விகளை வரவேற்கவேண்டும்.

வகுப்பறையில் ஜனநாயகம் இருந் தால்தான் மாணவர்கள் சுயசிந்தனை யோடு, அறிவியல் பார்வையோடு வளர்வார்கள். அது சமூகத்தில் இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண் டிருக்கும் மூடநம்பிக்கைகள் குறைய வழிவகுக்கும்.

– காந்தி ஆசிரியர், இராமநாதபுரம் (arasumathi78@gmail.com  – 9843379338)